ரெட்ரோ

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ மற்றும் தெலுங்கில் நானி நடித்துள்ள ஹிட் 3 ஆகிய இரு படங்களும் நேற்று மே 1 ஆம் தேதி வெளியாகின. இரண்டு படங்களுக்கும் பாசிட்டிவான விமர்சனங்களே வந்துள்ளன. சூர்யாவின் முந்தைய படமான கங்குவா தோல்வியைத் தழுவிய நிலையில் ரெட்ரோ திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரம் நானியின் ஹிட் 3 திரைப்படம் தெலுங்கு ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இரண்டு படங்களின் முதல் நாள் குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்

ரெட்ரோ முதல் நாள் வசூல் 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே , ஜெயராம் , கருணாகரன் , நாசர் , ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் 2D என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. ரெட்ரோ திரைப்படம் ரூ 65 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படம் முதல் நாளில் இந்தியாவில் ரூ 19.33 கோடி வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 17.25 கோடியும் தெலுங்கில் 1.95 கோடி , இந்தியில் 0.05 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஹிட் 3 முதல் நாள் வசூல் 

சைலேஷ் கோலனு இயக்கத்தி நானி ஶ்ரீநிதி ஷெட்டி இணைந்து நடித்துள்ள படம் ஹிட் 3. ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியளவில் ரூ 18 கோடி வசூலித்துள்ளது. ஆந்திரா மற்றும் தெல்ங்கானாவில் 17.25 கோடியும் தமிழ்நாட்டில் 35 லட்சம் , கன்னடத்தில் 5 லட்சம் , இந்தியில் 25 லட்சம் மற்றும் மலையாளத்தில் 1 லட்சம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் இப்படம் 43 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது