கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா கிளைமேக்ஸ் காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதன் தமிழக வெளியீட்டு உரிமையை முதல்வரின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருக்கிறது.


இந்த படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியது. அதன்படி, ஓடிடி உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ளது. விக்ரம் படத்தின் ப்ரோமோஷனை பிரம்மாண்டமாக செய்ய படக்குழு திட்டமிட்டு இருக்கிறார்களாம். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள 'பத்தல பத்தல' பாடல் இன்று (மே 11) வெளியாகும் என இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 






 இதற்கிடையில், 'விக்ரம்' படத்தில் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்றும், அவர் க்ளைமாக்ஸில் ஒரு கேமியோ வேடத்தில் காணப்படுவார் என்றும் செய்திகள் பரவி வருகிறது. மே 15 ஆம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா தோன்றுவார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.


விக்ரம் திரைப்படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், காளிதாஸ் ஜெயராம், எஸ். காயத்ரி, மைனா நந்தினி, வி.ஜே.மகேஸ்வரி, ஷிவானி நாராயணன் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வருகிற ஜூன் 3 ம் தேதி வெளியாகி வசூல் சாதனை படைக்க இருக்கிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண