Watch Video: பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த லுக்.. கங்குவா திரைப்படத்தில் சூர்யாவில் லுக் இதுதான்..

ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து வரும் கங்குவா திரைப்படத்தின் எப்படியானதாக இருக்கும்? என்பதை இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம்

Continues below advertisement

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. படத்தின் மீதான பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்து வரும் நிலையில் அண்மையில் பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சூர்யா கங்குவா திரைப்படத்தின் கெட் அப்பில் தோற்றமளித்துள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

கங்குவா

 சிவாவின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கங்குவா சூர்யாவின் 42-வது படம். ஒரு வரலாற்றுக் கதையாக  தயாராகி வரும் நிலையில், இப்படத்தில் 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திஷா பதானி இப்படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகை மிருணாள் தாக்கூரும் இப்படத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சிங்கம் பட சீரிஸூக்குப் பிறகு கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார். 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தல் இப்படம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா, பிஜூ தீவுகள், எண்ணூர் துறைமுகம், கேரளா, கொடைக்கானல், சென்னை  ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு  நடைபெற்று வந்தது

பிரமாண்டமான காட்சிகள்

மேலும், வரலாற்றுப் பகுதி காட்சிகளுக்காக பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்று வந்தது. படத்தின் விஎஃபெக்ஸ் பணிகள் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது . கடந்த ஏப்ரல் மாதம் இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் ப்ரோமோ ஒன்று சூர்யா பிறந்தநாள் அன்று வெளியிடப்படும் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்திருந்தார். இதனால் சூர்யாவின் பிறந்த நாளை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். 

ட்ரெண்டான புகைப்படங்கள்

முன்னதாக சூர்யா - சிறுத்தை சிவாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், ஜிம்மில் சூர்யா ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. தற்போது வெகு காலமாக மறைத்து வைக்கப்பட்ட சூர்யாவின் லுக் படத்தில் எப்படியானதாக இருக்கும் என்பது ரசிகர்களின் கவனத்திற்கு வந்துள்ளது.

வாடிவாசல்

கங்குவா படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்திற்காக சொந்தமாக ஒரு காளையை வளர்த்து பயிற்சி செய்து வருகிறார் நடிகர் சூர்யா. வாடிவாசல் திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகள் லண்டனில் தயாராகி வரும் நிலையில்  வாடிவாசல் படப்பிடிப்பு தாமதாகி வருகிறது. இந்த இடைவெளியில் இயக்குநர் சுதா கொங்கராவுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்திருக்கிறார் சூர்யா. ஒரு பீரியட் கேங்க்ஸ்டர் திரைப்படமாக இது இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா ரசிகர்களுக்கு அடுத்தடுத்த விருந்து காத்திருக்கிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola