சூர்யாவின் கருப்பு திரைப்படம் வரும் மே 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி மதுரையில் கருப்பு படத்தின் இசைவெளியீடு பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது 

Continues below advertisement

சூர்யா நடிப்பில் கடைசியாக ரெட்ரோ திரைப்படம் வெளியானது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்த மாஸ் படமாக அமையவில்லை. அந்த வகையில்  கருப்பு திரைப்படம் முழுக்க முழுக்க பக்கா கமர்சியல் திரைப்படமாக உருவாகியுள்ளது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். கருப்பு திரைப்படத்தை பண்டிகை நாளில் வெளியிடவே படக்குழு திட்டமிட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இதனால் இறுதியாக படத்தை கோடை விடுமுறையில் வெளியிட படக்குழு முவிவு செய்தது. 

சாய் அப்யங்கர் இசை மீதான விமர்சனங்கள் 

கருப்பு படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகியுள்ளன. இதில் சமீபத்தில் வெளியான நாங்க நாலு பேர் பாடல் ரசிகர்களிடையே விமர்சிக்கப்பட்டது. இப்பாடல் படத்தில் இடம்பெறாது என அண்மையில் ஆர்ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதவிர்த்து மற்றொரு பாடலான ராத்து ராசன் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பாடல்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும்  ட்யூட் திரைப்படத்தைப் போல் கருப்பு படத்தில்  சாய் அப்யங்கரின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கருப்பு படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என்ற நம்பப்படுகிறது 

Continues below advertisement

கருப்பு படம் குறித்து ஆர் ஜே பாலாஜி 

 இப்படம் குறித்து படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி தெரிவிக்கையில் இப்படி கூறினார். " கருப்பு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் . இப்படத்தில் நீங்கள் ஸ்ட்ராங்கான ஒரு முதல் பாதி அதனைத் தொடர்ந்து ஒரு த்ரில்லிங்கான இரண்டாம் பாதியை எதிர்பார்க்கலாம். முத்து படையப்பா ஆகிய படங்களைப் போல் திருப்பி திருப்பி பார்க்கக் கூடிய ஒரு படமாக கருப்பு படம் இருக்கும் . "

ஏன் மதுரையில் இசை வெளியீடு  

கருப்பு திரைப்படம் நாட்டார் தெய்வமான கருப்புசாமியை மையமாக வைத்து உருவாகியுள்ளது என்பதால் இப்படத்தின் இசை வெளியீட்டை மதுரையில் வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.