தமிழ் சினிமாவில் கியூட் ஜோடிகளான சூர்யா - ஜோதிகா தம்பதி 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்படம் மூலம் இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர். இவர்கள் இடையே திரைப்படங்களில் ஒர்க் அவுட்டான கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் டபுள் மடங்கு ஒர்க் அவுட்டாக இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். 


 



 


ஜோதிகா ரீ- என்ட்ரி :


திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்ட ஜோதிகா '36 வயதினிலே' திரைப்படம் மூலம் ரீ- என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்தார். காற்றின் மொழி, பொன்மகள் வந்தாள், நாச்சியார், மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக 'காதல் தி கோர்' மற்றும் அஜய் தேவ்கன் ஜோடியாக பாலிவுட்டில் 'ஷைத்தான்' படத்திலும் நடித்திருந்தார். 


 


சூர்யாவின் கங்குவா :


நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் 'கங்குவா' படத்தில் நடித்துள்ளார் இப்படம் இந்த ஆண்டில் வெளியாக உள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கெஸ்ட் ரோலில் ரோலெக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து அவரின் படங்கள் எதுவும் வெளியாகாததால் 'கங்குவா' படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள். 


 



 


ஜோடியாக ஒர்க் அவுட் :


இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒன்றாக இணைந்து ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. சூர்யாவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஜோதிகா ஒர்க் அவுட் செய்தது அனைவரையும் வாவ் சொல்ல வைத்து. 


 


மீண்டும் இணையும் சூர்யா - ஜோதிகா :


அதன் தொடர்ச்சியாக தற்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யா - ஜோதிகா ஜோடி இணைய உள்ளது என்பது தான் ஆச்சரியமான தகவல். தமிழ் இயக்குநர் ஹலிதா ஷமீம் மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் அஞ்சலி மேனனும் இருவரும் இணைந்து இயக்க இருக்கும் புதிய ஸ்கிரிப்டில் ஜோடி சேர உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் இந்த எவர்க்ரீன் கியூட் ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். இப்படம் குறித்த அதிகாரபூர்வமான தகவலும் மற்ற விவரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.