அமெரிக்காவிற்கு தனது குடும்பத்தினருடன் ட்ரிப் சென்றிருக்கும் வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 


தமிழ் சினிமாவின் ஆதர்ச தம்பதியாக வலம் வருபவர்கள் சூர்யா ஜோதிகா.. கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகளுடன் அன்யோன்யமாக வாழ்ந்து வரும் இந்தத்தம்பதி, அடிக்கடி சுற்றுலா செல்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்த ஜோடி அமெரிக்காவில் உள்ள கோஸ்ட்டா ரிக்காவிற்கு விசிட் அடித்துள்ளது. 


இது தொடர்பான வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில், “ ஜோதிகா சூர்யா இணைந்திருக்கும் புகைப்படம், போட்டிங் சென்றது, மலைக்குள் வாக்கிங் சென்றது, மிருகங்களை வீடியோ எடுத்தது உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கின்றன. இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது வாழ்த்துகளை கமெண்டுகளாக பதிவிட்டு வருகின்றனர். 






சூர்யா தற்போது வெற்றிமாறனின் வாடிவாசல், பாலாவின் சூர்யா 41 ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் வாடிவாசல் பிரபல எழுத்தாளர்  சி. சு. செல்லப்பா எழுதிய  ‘வாடிவாசல்’ நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தின் டெஸ்ட் ஷூட் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. 






பாலா சூர்யா இணைந்திருக்கும் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், நாங்கள் மீண்டும் படப்பிடிப்பில்கலந்து கொள்கிறோம் என சூர்யா ட்விட் செய்து அந்த சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தார்.