ஆனந்தம் திரைப்படம் மூலமாக சினிமாவில் இயக்குநராக களமிறங்கியவர் லிங்குசாமி. அடுத்தடுத்து பல வெற்றிப்படங்களை கொடுத்திருக்கிறார். இருந்தாலும் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் , படக்குழுவினருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.  படத்தின் தோல்வி குறித்தும் , சூர்யாவின் பெருந்தன்மை குறித்தும் நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பேசியிருக்கிறார் லிங்குசாமி


 




அதில் ” சூர்யா சாருக்கு இரண்டு , மூன்று  கதைகள் சொன்னேன். அதன் பிறகு சொன்ன அஞ்சான் திரைப்படக்கதை லாக் ஆனது. சூர்யா சாருக்கும் அந்த கதை ரொம்ப பிடித்தது. எனக்கும் பிடித்திருந்தது. பையா திரைப்படத்திற்கு இருந்த அதே 100 சதவிகித நம்பிக்கையுடன் , அஞ்சான் திரைப்படத்திற்கும் வேலை செய்தேன்.சந்தோஷ் சிவன் சார் ( ஒளிப்பதிவாளர் ) மணி சாருடன் தளபதி போன்ற படங்களில் வேலை செய்திருக்கிறார். அவர் வைக்கும் ஒவ்வொரு ஃபிரேமிலும் எனக்கு நம்பிக்கை கூடிக்கொண்டே சென்றது. சூர்யா சாரின் தோற்றம் , பேங் ..பேங்..பேங் பாடல் என எல்லாத்திலுமே செம ஃபிரேம் .  மிகப்பெரிய நடிகர் பட்டாளம் , மும்பையில் படப்பிடிப்பு என மிகுந்த செலவில் உருவானது அஞ்சான். தயாரிப்பாளர் தலையிடவே இல்லை. நான் படத்தை விரும்பிதான் செய்தேன். முதல் காட்சியை தேவி தியேட்டரில் சென்று பார்த்தேன். இடைவேளை சமயத்தில் ரசிகர்கள் என்னை தூக்கிட்டாங்க. அதே சமயத்தில் மலேசிய ரசிகர்கள் முதல்நாள் படத்தை முழுவதும் பார்த்திருக்கிறார்கள். பிருந்தா சார் மலேசியாவில் படத்தை பார்த்துவிட்டு அங்கு இருந்த ரசிகர்கள் இரண்டாம் பாதியில் டிஸ்டர்ப் ஆகியிருப்பதாக கூறினார். ஷங்கர் சாரை போலத்தான் நானும் ஒரு திரையரங்கில் படத்தை பர்ப்பேன் . அப்போது என்ன முடிவு எடுக்கிறேனோ அதைத்தான் வைத்துக்கொள்வேன் . அது போல படத்தை பார்த்துவிட்டு திரும்பினேன். அதன் பிறகு சமூக வலைத்தளங்களில் முதலில்  இரையானது அந்த படம்தான். சிலர் வேண்டுமென்றே சாடினார்கள். ஆனால் சூர்யா சாரின்  எந்த படத்திற்கும் அதுவரையில் இல்லாத அளவிற்கு மூன்று நாளில் மிகப்பெரிய கலெக்‌ஷனை ஈட்டியது. சூர்யா சாருக்கு படம் ரொம்ப பிடித்திருந்தது. ரிலீஸுக்கு பிறகு மூன்று கோடி ரூபாய் சம்பள பாக்கியிருந்தது சூர்யா சாருக்கு. ஆனால் கால் பண்ணி அது எனக்கு வேண்டாம் என கூறிவிட்டார். அதற்கு நன்றிக்கடனாக சதுரங்க வேட்டை ராஜா , ரைட்ஸ் கேட்டாரு , மொத்த ரைட்ஸையும்  இலவசமாக கொடுத்துட்டேன் . எல்லா மொழிகள்லயும். அதன் பிறகு சூர்யா சாருடன் படம் பண்ண கேட்டேன். எந்த தயக்கமும் இல்லாமல் அறிவிப்பு வெளியிட சொன்னார். நானும் பொது மேடையில் அறிவிப்பை வெளியிட்டேன் “ என்றார் பெருமிதமாக .