தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனரான பாலா இயக்கத்தில் ‘வணங்கான்’ எனும் திரைப்படத்தில் நடித்து வந்தார். படப்பிடிப்பு தொடங்கப்பட்டு கன்னியாகுமரியில் சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் இயக்குனர் பாலாவுக்கு நடிகர் சூர்யாவுக்கும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வணங்கான் படப்பிடிப்பு இடையில் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 




இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு பாலா தரப்பில் இருந்து அதிர்ச்சியளிக்கும் வகையில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், “ என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான் என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன் ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.  


என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா, இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது. எனவே 'வணங்காள்" திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும், அவரது நலன் கருதி எடுத்த முடிவு. நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம் ” என இயக்குநர் பாலா அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


 


 






சூர்யா விலக காரணம் :
 
வணங்கான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் சம்பந்தமாகவே சூர்யா - பாலா மோதல் ஏற்பட்டதாகவும் அதனால் வெறுப்பான இயக்குனர் இந்த பிரிவை பற்றி சொல்ல நடிகரும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஒரு மாத காலமாக கன்னியாகுமரியில் நடைபெற்ற படப்பிடிப்பில் வெறும் இரண்டே காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட்டுள்ளன. இந்த ரீதியில் தொடர்ந்தால் பட்ஜெட் எகிறிவிடும் என்ற அச்சத்தால் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பின்வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இத்தனை ஆண்டு உறவை சண்டையுடன் முறித்து கொள்வதை காட்டிலும் கைகுலுக்கி சந்தோஷமாக விடைபெற்றுக் கொள்ளவே இந்த முடிவு என்றும் கோலிவுட் சினிமா வட்டாரம் தெரிவிக்கின்றன.   


இதுபோல பல தரப்பிலிருந்து பல வகையான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பத்திரிகையாளர் ஒருவர் படப்பிடிப்பில் என்ன நடந்தது என்பது குறித்து பேசி இருக்கிறார். அதில அவர் கூறியிருந்த தகவல்கள் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தன. 


அந்த பேட்டியில் அவர், “ பாலா ஒரு சைக்கோ இயக்குனர், அதே சமயத்தில் சூர்யா மிகவும் திமிர் பிடித்த நடிகர் அவருடைய வளர்ச்சியை நான் குற்றம் சொல்லவில்லை அது அவருடைய கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசு தான் ஆனால் பழைய பாலாவும் பழைய சூர்யாவும் தற்போது இல்லை.


இந்த நிலையில் பாலா கதையை முழுமையாக முடிக்காத காரணத்தால் சூர்யா மற்றும் அவருடைய தயாரிப்பு நிறுவனமும்  விலகியது . அதுமட்டுமல்லாமல் பாலா ஒருநாள் சூர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வரவைத்துவிட்டு ஒரு காட்சி கூட எடுக்காமல் ஒரு நாள் முழுவதும் வீணாக்கிவிட்டதால் கோபமடைந்த சூர்யா, இந்த படத்தில் இருந்து விலகினார் என்று எனக்கு தகவல் கிடைத்தது” என அந்தப் பத்திரிகையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.