Suriya 44 First Shot: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் சூர்யாவுடன் கைகோர்த்துள்ள படம் சூர்யா 44.


சூர்யாவின் கலக்கல் கெட்-அப்


2D என்டர்டெயின்மென்ட் - ஸ்டோன் பெஞ்ச் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் கடந்த சில நாள்களாகவே பேசுபொருளாகி வந்த நிலையில், நேற்று இப்படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே,  நடிகர்கள் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்தார்.


சூர்யா ரசிகர்களை இத்தகவல் உற்சாகத்தில் ஆழ்த்திய நிலையில், தற்போது இப்படத்தின் முதல் காட்சியை கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்துள்ளார். 


மாஸ் வீடியோ


 






குறிப்பாக 80களின் ரெட்ரோ நாயகர்களின் ஆடை மற்றும் ஃபங்க் சிகை அலங்காரத்துடன் சூர்யாவின் லுக் இந்த வீடியோவில் மாஸாக அமைந்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. 


வில்லன் இவரா?


முன்னதாக சூர்யா 44 படப்பிடிப்புக்காக படக்குழு அந்தமான் புறப்பட்டுச் சென்ற நிலையில், தற்போது முதல் காட்சி வீடியோ வெளியாகியுள்ளது. கேங்ஸ்டர் போன்ற தோற்றத்தில் சூர்யா இந்த வீடியோவில் தோன்றியுள்ள நிலையில், இந்த வீடியோவுடன் ‘காதல், சிரிப்பு, போர்’ எனும் வசனம் இடம்பெற்று எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


இயக்குநரும் நடிகருமான உறியடி விஜயகுமார் இப்படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக இப்படத்தில் நடிப்பதாகவும், கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசை அமைக்க உள்ளார். மேலும், இப்படத்துக்கு ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்வதாகவும், ஷஃபிக் முகம்மது அலி எடிட்டிங் பணிகளை மேற்கொள்வதாகவும் கார்த்திக் சுப்பராஜ் சில நாள்களுக்கு முன் அறிவித்திருந்தார். 


சூர்யா 41 முதல் சூர்யா 44 வரை


சூர்யாவின் 42ஆவது படமாக கங்குவா மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகி ரிலீசுக்குத் தயாராக உள்ளது. அடுத்ததாக சூர்யா, சுதா கொங்கராவுடன் கைகோர்த்துள்ள சூர்யா 43 திரைப்படமான புறநானூறு படம் பற்றிய அப்டேட்கள் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அதிகாரப்பூர்வமாக வெளியாகின. நஸ்ரியா, துல்கர் சல்மான், விஜய் வர்மா என பலர் நடிப்பில் உருவாகி வந்த இப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தள்ளிப்போயுள்ளதாகக் கூறப்படும் நிலையில், சூர்யா 44 படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 


மற்றொருபுறம் சூர்யாவின் 41ஆவது படமான வாடிவாசல்  கைவிடப்படுவதாகத் தகவல் வெளியான நிலையில், விடுதலை 2 ஷூட்டிங்கில் தான் பிஸியாக இருப்பதாகவும், விரைவில் வாடிவாசல் பணிகள் தொடங்கும் எனவும் வெற்றிமாறன் சில வாரங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வாடிவாசல் படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.


மேலும் படிக்க: Garudan Movie Review: சூரியின் மாஸ் ஆக்சன்.. பக்கா கமர்ஷியல் கதையில் ஹீரோவாக ஜெயித்தாரா.. கருடன் பட விமர்சனம்!


PT Sir Review: ஹிப் ஹாப் ஆதி ஸ்கோர் செய்தாரா? வெறுப்பேற்றினாரா?.. "PT சார்" படத்தின் முழு விமர்சனம்!