‘அண்ணாத்த' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், தற்போது சென்சார் போர்டு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.


தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்டு, தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக திரைக்கு வர உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வையும், மோஷன் போஸ்டரும் கடந்த 10ஆம் தேதி வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.


இதனைத்தொடர்ந்து, கடந்த 4ஆம் தேதி ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் அறிமுக பாடல் வெளியானது. இந்த பாடலை மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். அதன்பின், இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியானது. ஸ்ரேயா கோஷல், சித் ஸ்ரீராம் குரலில் மொலோடி பாடலான இதில், ரஜினிகாந்த் நயன்தாராவுடன் டூயட் பாடியுள்ளார்.


 






இதனைத் தொடர்ந்து, அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த படத்தின் டீசர் நேற்றுமுன் தினம் வெளியானது. அதிரடியாகவும், மாஸாக உள்ள டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினியின் நடை, ஸ்டைல், வசனம் என ஒவ்வொன்றும் நன்றாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டீசர் வெளியாகி 12 மணி நேரத்தில் 40 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அத்துடன் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடமும் பிடித்தது. இதனிடையே,  நேற்று தெலுங்கு ஃப்ரஸ்ட் லுக் போஸ்டரையும் படம் நிறுவனம் வெளியிட்டது. தெலுங்கில் படத்திற்கு ‘பெத்தண்ணா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.


 






இந்த நிலையில்,  ‘அண்ணாத்த’ திரைப்படத்திற்கு (யு/ஏ) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக சன் பிக்சர்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த தீபாவளி சும்மா சரவெடிதான் என்றும் பதிவிடப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


 


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


 


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


 


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


 


 


யூடிபில் வீடியோக்களை காண