Rajini: இமயமலை சுற்றுப்பயணத்தை முடித்து கொண்ட ரஜினி அயோத்திக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். ரஜினி நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளிவந்த ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிசில் கலெக்‌ஷனை வாரி குவித்து வருகிறது. இந்த சூழலில் ரஜினி வடமாநிலங்களில் ஆன்மீக பயணத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஜெயிலர் படம் ரிலீசாவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக இமயமலைக்கு ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். 


இமயமலைக்கு சென்று அங்குள்ள பாபாஜி குகையில் வழிப்பட்ட ரஜினி தமிழகம் திரும்புவதற்கு முன்னதாக வடமாநிலங்களில் ஆன்மீக வழிபாட்டில் ஈடுபடு வருகிறார். கடந்த 12ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோவிலுக்கு சென்ற ரஜினியின் புகைப்படங்களும், வீடியோக்களுக்கும் வெளிவந்தன. பத்ரிநாத் கோவிலில் ரஜினியை பார்த்த ரசிகர்கள் செல்பியும், புகைப்படங்களும் எடுத்து கொண்டனர். 






அடுத்ததாக துவாரகா சென்று வழிபாடு நடத்திய ரஜினி தற்போது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தி கோவிலுக்கு சென்றுள்ளார். அயோத்தியில் இருக்கும் அனுமன்கர்கி கோயிலுக்கு சென்ற ரஜினி, அனுமனை வணங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அயோத்தியில் அனுமதி தரிசனம் செய்தது தனது அதிர்ஷ்டம் என்றும், நீண்ட நாட்களாக அங்கு வழிபாடு நடத்த வேண்டும் என விரும்பியதாகவும் தெரிவித்துள்ளார். 






முன்னதாக ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை மரியாதை நிமித்தமாக ரஜினி சந்தித்தார். இதேபோல் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்தி பென், அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரையும் சந்தித்தார். அப்பொழுது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்து வணங்கியதற்கு பலரும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்தனர். 


நேற்று லக்னோவில் உத்திரபிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத்துடன் இணைந்து ரஜினியும், அவரது மனைவி லதாவும் இணைந்து ஜெயிலர் படத்தை பார்த்தனர். இந்த நிலையில் தனது ஆன்மீக பயணத்தின் தொடர்ச்சியாக அயோத்தியில் ராமர் கோவிலுக்கும் ரஜினி சென்றுள்ளார். புதிதாக பிரமாண்டமாக அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை ரஜினி பார்வையிட்ட புகைப்படங்கல் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிசில் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலை குவித்து வருகிறது. சன்பிக்சர்ஸ் தயாரித்து இருக்கும் இந்த படத்துக்கு அனிரூத் இசை அமைத்து உள்ளார். படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெயிலரில் ரஜினியின் நடிப்பை பார்த்த ரசிகர்கள் முத்துவேல் பாண்டியனை கொண்டாடி வருகின்றனர்.