கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பாபி தியோல் , திஷா பதானி , யோகி பாபு , கருணாஸ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ள இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
கங்குவா இசை வெளியீட்டில் ரஜினிகாந்த்
ரஜினியின் வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி வெளியானது. இதே நாளில் சூர்யாவின் கங்குவா திரைப்படமும் வெளியாக இருந்தது. பின் மூத்த நடிகர் ரஜினிக்கு வழிவிட்டு கங்குவா படத்தின் ரிலீஸை படக்குழு ஒத்திவைத்தது. ஒருவகையில் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது படக்குழுவிற்கு சாதகமாக அமைந்துள்ளது.
பான் இந்திய அளவில் இந்த படத்திற்கு ப்ரோமோஷன் வேலைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. மூன்று மொழிகளில் கங்குவா படத்தின் இசை வெளியீடு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தமிழ், இந்தி , மலையாளம் , கன்னடம் , ஆங்கிலம் , தெலுங்கு , ஸ்பேனிஷ் , ஃபிரெஞ்சு என மொத்தம் எட்டு மொழிகளில் படம் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார். எட்டு மொழிகளிலும் சூர்யாவின் குரல் ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கங்குவா படத்தின் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு சென்னை உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த நிகழ்வில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலனந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வேட்டையன் படத்தால் கங்குவா ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து ரஜினி மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த நிகழ்வுக்கு பின் இந்த மோதல் சரியாகும் என எதிர்பார்க்கலாம்.
கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் கூலி. இப்படத்தில் நாகர்ஜூனா , உபேந்திரா , செளபின் சாஹிர் , ஸ்ருதி ஹாசன் , சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகிறார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. ஹைதராபாதில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு பின் சென்னையில் நடைபெற்றது. தற்போது விசாகபட்டினம் ஹார்பரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.