சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியது. இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் மறைந்த நடிகர் புனித்ராஜ்குமாரின் அணணன் சிவராஜ்குமார் நடிக்க உள்ளார் என்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது.




இந்த நிலையில், பெயரிடப்படாத இந்த தலைவர் 169 திரைப்படத்தின் பெயர் மற்றும் கதை என்று இணையத்தில் பல்வேறு பெயர்களும், கதைகளும் உலா வருகின்றன. இந்த நிலையில், சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தின் புகைப்படம் ஒன்றையும், அதில் அவர் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் படத்திற்கு ஜெயிலர் என்றும் தலைப்பிட்டு வெளியிட்ட புகைப்படம் தற்போது  செம வைரலாகி வருகிறது.






 அந்த புகைப்படத்தில் ரஜினிகாந்தின் கெட்டப் அற்புதமாக இருப்பதால் ரசிகர்கள் சிலர் உண்மையில் இதுதான் தலைவர் 169 படத்தின் போஸ்டர் என்று நினைத்து தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதுமட்டுமின்றி இன்னும் சிலர் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக சிவ ராஜ்குமார் நடிக்கிறார் என்றும், அவரது மனைவிதான் ரம்யாகிருஷ்ணன் என்றும், அவர் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக படத்தில் நடித்துள்ளார் என்றும் இணையவாசிகள் ஒவ்வொருவரும் தங்களுடைய சொந்த கற்பனையில் நெல்சன் இயக்கும் படத்திற்கு கதையை தீட்டி உலாவர விட்டுக்கொண்டிருக்கின்றனர்.


தலைவர் 169 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கும்போதே நெல்சனுக்கு இந்த படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது.  பீஸ்ட் படம் படுதோல்வி அடைந்ததால் நெல்சனுக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கை நழுவி போனதாக தகவல் வெளியானது. ஆனால், ரஜினிகாந்த் அளித்த வாக்குறுதியின் படி ரஜினியின் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவது உறுதி செய்யப்பட்டது.




தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படத்திற்கான ரஜினிகாந்தின் லுக் மட்டும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. பீஸ்ட் தோல்வியால் இந்த படத்தை மிகவும் கவனத்துடன் நெல்சன் இயக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் யார்? யார்? நடிக்கிறார்கள் என்பது விரைவில் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண