மதராஸி பார்த்த ரஜினிகாந்த்
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி திரைப்படம் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. மதராஸி படத்தைப் பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிவகார்த்திகேயனுக்கு ஃபோனில் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் "ஓ மை காட், எக்ஸலண்ட் , என்ன நடிப்பு , என்ன ஆக்ஷன் , சூப்பர் எஸ் கே , ஆக்ஷன் ஹீரோ ஆகிட்டீங்க, எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது , காட் ப்ளெஸ் " என ரஜினி தன்னிடம் கூறியதாக சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்