கன்னட நடிகர் தர்ஷன் ஏற்கனவே விஜயலட்சுமி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்த தர்ஷன் பவித்ரா கவுடாவுடன் லிவிங் லைப்பில் இருந்துள்ளார். இந்நிலையில், பவித்ரா கவுடா பற்றி சமூக வலைதளத்தில் ரேணுகாசாமி என்ற இளைஞர் மோசமாக கமெண்ட் செய்து சமூகவலைதளத்தில் அவருடைய ஆபாசமான புகைப்படங்களையும் பதிவிட்டார். இந்நிலையில், ரேணுகா சுவாமி சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்ட சிலர் சேர்ந்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.
ரேணுகா சுவாமி கொடூர கொலை
ரேணுகா சுவாமியை, பவித்ரா காலணியால் மிதித்து துன்புறுத்தியதுடன், நக கருவியை பயன்படுத்தி,ரேணுகா சுவாமியின் ஆண் உறுப்பில் மின்சாரத்தை பாய்ச்சி, விதைப்பைகளை அடித்து சிதைத்து, பல கொடுமைகளை செய்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, நடிகர் தர்ஷன், அவரது மனைவி பவித்ரா கவுடா உள்பட 13 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது நடிகர் தர்ஷன் சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
எனக்கு விஷம் கொடுங்க என கதறிய நடிகர்
அதில், தனக்கு வீட்டு உணவை அனுமதிக்க வேண்டும். பெங்களூர் சிறையில் இருந்து பல்லாரி சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையில், நடிகர் தர்ஷன் வீடியோ கான்பரன்சிங் வழியாக ஆஜரானார். அப்போது, "பல நாட்களாக சூரிய ஒளியை பார்க்கவில்லை எனது கைகளில் பூஞ்சை உருவாகியுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், என்னால் உயிர் வாழவே முடியாது தயவு செய்து எனக்கு விஷம் கொடுங்கள் அதை குடித்துவிட்டு இறந்து விடுகிறேன் எனக் கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்ட நீதிபதிகள் என்னிடம் இப்படி எல்லாம் பேசக்கூடாது, அடிப்படை வசதிகளை செய்து தர காவல் கண்காளிப்பாளரிடம் எடுத்துரைக்கிறேன் என கூறியுள்ளனர்.