சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஆக்ஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் தொடக்கம் முதல் இன்றுவரை வெளியான அனைத்து போஸ்டர்களையும் பார்க்கலாம்.


ஜெயிலர்


நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டைப் படமாக தயாராகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


படக்குழு வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்கள்


ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் இன்று வரை ஏராளமான போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு போஸ்டரை வெளியிடும்போதும் அது ரசிகர்களுக்கு பிடித்த வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவு சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் தொடங்கி இதுவரை வெளியான போஸ்டர்களை மொத்தமாக பார்க்கலாம்.