இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இவரது நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியாகியுள்ளது. அதாவது, கூலி படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் 6 மணிக்கு வெளியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கூலி பாட்டு ரிலீஸ் எப்போது?
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தை தயாரிக்கும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் காட்சியில் வருவது போல அனிருத் என்ட்ரி உள்ளது. பின்னர், நடன இயக்குனர் சான்டி நடன அமைப்பில் சிகிடு சிகிடு பாடல் வெளியாக உள்ளது என்ற அறிவிப்பு இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஷியில் ரஜினி ரசிகர்கள்:
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஆக்ஷன் விருந்தாக இந்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, செளபின் சாஹிர், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஏற்கனவே படத்தின் பெயர் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர், ரஜினிகாந்தின் போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோக்கள் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தியது. தற்போது இந்த வீடியோ அவர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.
சுதந்திர தின ரிலீஸ்:
முழுக்க முழுக்க ஆக்ஷன் விருந்தாக தங்கக்கடத்தல், தந்தை - மகள் சென்டிமென்டில் உருவாகி வரும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 14ம் சுதந்திர தின கொண்டாட்டாமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு மத்தியில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறார்.
கூலி படம் வெளியாவதற்கு முன்பே அதன் வர்த்தகம் கோடிக்கணக்கில் நடைபெற்று வருகிறது. இதனால், படம் வெளியான பிறகு நிச்சயம் வருவாயாகவே இருக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.