Srikanth Arrest: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலின்போது நடிகர் ஸ்ரீகாந்த் போதையில் தகராறில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
நடிகர் ஸ்ரீகாந்த் கைது:
இதையடுத்து, இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நடிகர் ஸ்ரீகாந்தை விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பிரகாஷ் என்பவரிடம் போதைப்பொருள் வாங்கியது தெரியவந்தது. மேலும், அவரது ரத்தமாதிரியை பரிசோதனை செய்ததில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த தகராறில் அதிமுக பிரமுகர் பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியபோது தான் பிரபல நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதைப்பொருள் வழங்கியதாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்தார். போதைப்பொருள் பயன்பாடு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் விசாரணை நடத்தி அவரது ரத்தமாதிரியை பரிசோதனை நடத்தியதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. விசாரணையிலும் தகவல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார்.
பழக்கம் ஏற்பட்டது எப்படி?
இந்த விவகாரத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நடிகர் ஸ்ரீசாந்திற்கும், பிரசாத்திற்கும் இடையே கடந்த 5 வருடங்களாக நட்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், விரைவில் கைது செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
போதைப்பொருள் விநியோகம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பிரசாத் பிரபலங்கள் பங்கேற்கும் பார்ட்டிகளில் பங்கேற்று தொடர்ந்து அவர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரசாத்தை விசாரித்தால் அவர் எந்தெந்த நடிகர்கள், நடிகைகளுக்கு போதைப்பொருள் வழங்கினார்? என்பது குறித்த பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2002ம் ஆண்டு ரோஜா கூட்டம் என்ற படம் மூலமாக நடிகராக அறிமுகமானார் ஸ்ரீகாந்த். முதல்படமே மிகப்பெரிய வெற்றி பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அடுத்தடுத்து நடித்த ஏப்ரல் மாதத்தில், மனசெல்லாம், பார்த்திபன் கனவு படங்கள் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியது.
ரசிகர்கள் அதிர்ச்சி:
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளத்திலும் அடுத்தடுத்து நடித்து அசத்தினார். தமிழில் அவர் அடுத்து நடித்த படங்கள் பெரியளவில் வெற்றி பெறாத சூழலில், விஜய்யுடன் இணைந்து நண்பன் படத்தில் நடித்தார். அந்த படத்தில் மீண்டும் அவரது செல்வாக்கு உயர்ந்தது. ஆனாலும், கதைத்தேர்வில் மிகவும் மோசமாக இருந்ததால் அவர் தமிழில் தொடர்ந்து படங்கள் நடித்தும் தாேல்விப் படங்களாக மட்டுமே அந்த படங்கள் அமைந்தது.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான தினசரி படம் ரசிகர்களால் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது. படத்தின் கதாநாயகி தயாரித்த இந்த படம் ரசிகர்களால் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டது. இயக்குனர் ரங்கராஜ் இயக்கத்தில் இவர் நடித்த கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் கடைசியாக இவருக்கு ரிலீசான படம். அந்த படமும் இவருக்கு தோல்வியையே தந்தது.
மிகப்பெரிய நடிகராக வர வேண்டிய ஸ்ரீகாந்த் தொடர் தோல்வி மட்டுமின்றி தற்போது போதை வழக்கிலும் சிக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.