Super Star Rajinikanth 47 years of Rajinism: உலகமே கொண்டாடும் ஒரு நாள்... 47 ஆண்டுகள் ரஜினிசம்


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை பயணத்தை தொடங்கி 47 ஆண்டுகள் நாளையொடு நிறைவடைகின்றன. அதை உலகத்தின் அனைத்து முளைகளிலும் உள்ள சினிமா ரசிகர்கள் அனைவரும் மிகவும் விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். 



ஜெயிலர் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு :


47ம் ஆண்டு ரஜினிசத்தை கொண்டாடும் விதமாக சூப்பர் ஸ்டார் நடிக்கும் ஜெயிலர் படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. 47ம் ஆண்டு ரஜினிசத்திற்கான காமன் டிபியை வெளியிட்டுள்ளனர். இதை மிகவும் வெறித்தனமாக வடிவமைத்துள்ளார் வெங்கி. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.  அது இன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் "ஜெயிலர்" படத்தை நெல்சன் இயக்கவுள்ளார்.  சூப்பர் ஸ்டாரின் இப்படத்திற்கு இசையமைக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். இது தலைவர் நடிக்கும் 169 திரைப்படம்.  பல வாட்ஸாப் ஸ்டேட்டஸ்களும் வெளியான வண்ணமாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த உலகமே கொண்டாடும் ஒரு கலைஞர். அப்படி இருக்கையில் இந்த நாளை எப்படி கொண்டாடாமல் இருப்பார்கள். 


பிரபலங்கள் பலர் ட்விட்டர் மூலம் வாழ்த்து:


திரை ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகத்தினரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து கொண்டு இருக்கின்றனர். 47 வருடங்களாக இணையில்லா நடிகர் என பல திரை நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர் மாதவன் உள்ளிட்ட பலரும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களையும் சூப்பர்ஸ்டாரின் CDPயையும் பகிர்ந்து வருகின்றனர். 


 






உழைப்பே உயர்வு :


ஒரு சாதாரண மனிதர் இன்று மாபெரும் வளர்ச்சியை அடைந்துள்ளார். இதற்கு முக்கியமான காரணம் அவரது அயராத கடுமையான உழைப்பு மட்டுமே. அவர்க்கு ஈடு இணையாக யாருமே இனிமேல் வரவே முடியாது. திரைத்துறையில் 47 ஆண்டுகள் ஆன பின்னும் இன்றும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார்.  திரையுலகத்தை தாண்டியும் ரஜினிகாந்த் ஒரு சிறந்த மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த ஒப்பிலா நடிகருக்கு ரஜினி ரசிகர்கள் சார்பில் எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.