இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகிவரும் படம் ’அண்ணாத்த" படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடக்கிறது, படப்பிடிப்பு அடுத்த பத்து நாட்களில் முடிவடையும். இதற்கிடையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "அண்ணாத்த " தயாரிப்பாளருடன் மீண்டும் இணைவதற்கு ஒப்புக்கொண்டார் என்ற செய்திகளும் இணையத்தளத்தில் வெளியானது .'
ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்த பின்னர் டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு , தனது வழக்கமான உடல் நல பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார் என்று தெரியவந்துள்ளது . ஜூன் மாதம் , ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் மருமகன் தனுஷ் ஆகியோருடன் அமெரிக்காவில் தங்கி மருத்துவ பரிசோதனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக இந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்காவுக்கு புறப்பட்டார்.
இதற்கிடையில் ரஜினிகாந்த் தந்து 169-வது படம் யார் இயக்கப்போகிறார் என்பதையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது . ரஜினிகாந்த் 'அண்ணாத்த' படத்தில் வேடிக்கையான அன்பான கிராமத் தலைவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. தலைவர் நலமுடன் வரவேண்டும் ரசிகர்கள் இணையத்தில் பதிவு செய்து வருகிறார்கள் .