சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக  பிரபலமானவர் மாளவிகா சுந்தர் இவரின் குரலுக்காகவே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மாளவிகா இன்ஸ்டாகிராமில் மிகுந்த ஆக்டிவாக இருப்பவர் . அவ்வப்போது உடற்பயிற்சி குறித்த வீடியோக்கள் , பாடல்கள் பாடிய வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 270k பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் மாளவிகா எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என கேட்ட ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.





அதன் பிறகு ஸ்டோரி மூலம் கேள்விகளுக்கு பதிலளித்த  மாளவிகாவிடம் புகைப்படம் தொடர்பாக பல கேள்விகளை கேட்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.முதலில் புகைப்படம் தொடர்பாக பதிலளித்த மாளவிகா, அவர் எனது வருங்கால கணவர்.அவருக்கும் எனக்கும் நிச்சயமாகிவிட்டது. விரைவில் திருமணம் என தெரிவித்தார்.






பிறகு ரசிகர் ஒருவர் உங்களில் யாருக்கு வயது குறைவு ? என கேட்க..எங்கள் இருவரில் கஷ்யப் ஒரு வயது இளமையானவர். அவருக்கு வயது  32 என கூறினார்.





மேலும் உங்களை விட சிறிய வயதுடைய நபரை திருமணம் செய்துக்கொள்ள உங்கள் வீட்டில் இருப்பவர்களை எப்படி சம்மதிக்க வைத்தீர்கள் என கேட்க, அதற்கு பதிலளித்த மாளவிகா ..”சம்மதிக்க வைக்க கஷ்டமெல்லாம் இல்லை..எப்போதான் திருமணம் செய்துக்கொள்வேனோ என பெற்றோர்கள் காத்திருந்தனர். கஷ்யப் பற்றி கூறியதுமே சம்மதித்துவிட்டனர்” என தெரிவித்துள்ளார்.







மாளவிகா சுந்தர் சூப்பர் சிங்கரில் மட்டுமல்லாமல் வட இந்தியாவின் புகழ்பெற்ற பாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஆனால் அங்கு இறுதி போட்டி வரையில் சென்ற அவரால் வெற்றி பெற முடியவில்லை. தமிழ் சினிமாவிலும் , மேடை நிகழ்ச்சிகளிலும் பாடல் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து.