பிரபல சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சியான 'சூப்பர் சிங்கர்' மூலம் பலரின் மனதை கவர்ந்தவர் பாடகி பிரியங்கா. இவரின் சிறப்பான குரலுக்கு பலர் அடிமையாக உள்ளனர். சமூக வலைத்தளங்கில் இவருக்கு ஏராளமான பேர் ரசிகர்களாக உள்ளனர். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரை 8 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால் இவருடைய இன்ஸ்டாகிராம் பதிவுகள் எப்போதும் அதிக வரவேற்பை பெரும். குறிப்பாக இவர் பாடிவது போன்ற வீடியோக்கள் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ் பெற்று அசத்தும்.
அண்மையில் தனது பல் மருத்துவர் படிப்பை முடித்து விட்டு, பல் மருத்துவராக பணிபுரியும் படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதுவும் மிகவும் வைரலானது. இந்நிலையில் தற்போது சாதி தொடர்பாக அவர் தன்னுடைய ரசிகர்களுடன் உரையாடலை நடத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பக்கத்தில் "திருமணங்களுக்கு உதவும் மேட்ரிமோனியல் வெப்சைட்கள் ஏன் சாதியை முன்னிலை படுத்துகின்றன? இவை அனைத்தும் சாதியை முன்னிலை படுத்த அமைக்கப்பட்டதா என்று நீங்கள் நினைக்கவில்லையா? "என்று அவர் கேட்டுள்ளார்.
இதற்கு அவருடைய ஃபாலோயர்கள் பலர் தங்களது பதில்களை அளித்தனர். அதில் சிலவற்றிற்கு பிரியங்கா பதிலும் அளித்துள்ளார். குறிப்பாக ஒருவர் சாதி மற்றும் மதத்தை, இனங்கள் மற்றும் தாவரங்களின் இனத்துடன் ஒப்பிட்டார்.சாதிகள் மனதர்களின் அடையாளத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன என்ற ரீதியில் கருத்து தெரிவித்தார். இதற்கு பிரியங்கா, "சாதி என்பது ஆரம்பத்தில் அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்பட்டது. மக்கள் என்ன தொழிலை செய்றார்கள் என்பதை அடிப்படையாக கொண்டது.
ஆனால் சாதி பாகுபாடு என்பது எப்போது செயல்பாட்டுக்கு வந்தது ? திருமணம் போன்ற ஒரு செயலுக்கு ஒரே ஜாதிகளை ஏன் அடையாளம் காண வேண்டும் ? " எனக் கூறினார். மற்றொருவர், "மேட்ரிமோனியல் வெப்சைட்கள் மக்கள் தங்களது கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுடன் ஒன்றிணைய மற்றும் எளிதில் திருமணம் செய்து கொள்ள உதவுகின்றன" எனக் கூறியிருந்தார். இதற்கு, "இது எல்லாம் சப்ப கட்டுங்க.இந்த வகையான நியாயங்கள் வாதத்திற்காக மட்டுமே செய்யப்படுகின்றன, மன்னிக்கவும்" என்று பிரியங்கா பதில் அளித்தார். சாதிகள் தொடர்பாக பிரியங்காவின் இந்த உரையாடலை அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் முன்பு எல்லாம் நம் பெயருடன் சேர்த்து சாதியின் பெயரை வைக்கும் பழக்கம் இருந்தது. நாளடைவில் அந்தப் பழக்கம் மிகவும் குறைய தொடங்கியது. இது பெரும் முன்னேற்றமாக பார்க்கப்பட்டது. ஆனால், பெயர்களில் இருந்து சாதியை எடுக்க தெரிந்த நமக்கு மனதிலிருந்து இன்னும் சாதியை எடுக்க தெரியவில்லை. அதன் ஒரு வெளிப்பாடு தான் இது போன்ற சாதி வாரியான மேட்ரிமோனியல் சைட்கள். இவை இன்னும் சாதிய கட்டுப்பாடுகளை தூக்கிப்பிடிக்கும் பெரிய தூண்களாக இவை அமையும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்க முடியாது.
மேலும் படிக்க: HBD RAMBHA: ரம்பாவின் இந்த 7 பாடல்களை கேட்டு பாருங்க! நீங்களும் 90's கிட்ஸ் ஆவீங்க!