சூப்பர் சிங்கர் மாளவிகா தனது வருங்கால கணவருக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக  பிரபலமானவர் மாளவிகா சுந்தர் இவரின் குரலுக்காகவே இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மாளவிகா இன்ஸ்டாகிராமில் மிகுந்த ஆக்டிவாக இருப்பவர் . அவ்வப்போது உடற்பயிற்சி குறித்த வீடியோக்கள் , பாடல்கள் பாடிய வீடியோ உள்ளிட்டவற்றை பகிர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராமில் 270k பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். 

மாளவிகா சமீபத்தில், தனக்கு திருமணம் நிச்சயம் ஆகியுள்ளதாகவும், கணவருக்கு தன்னைவிட ஒரு வயது குறைவு என்றும் கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

தற்போது, மேலும் ஒரு அதிர்ச்சியாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், தனது வருங்கால கணவருக்கு மாளவிகா,  லிப் டூ லிப் கிஸ் கொடுக்கிறார். அத்துடன்,  33 வயதில் சரியான காதல் கதை கிடைத்தது என்றும் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

மாளவிகா சுந்தர் சூப்பர் சிங்கரில் மட்டுமல்லாமல் வட இந்தியாவின் புகழ்பெற்ற பாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். ஆனால் அங்கு இறுதி போட்டி வரையில் சென்ற அவரால் வெற்றி பெற முடியவில்லை. தமிழ் சினிமாவிலும் , மேடை நிகழ்ச்சிகளிலும் பாடல் பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

 

 

 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண