விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகிறது விஜய் டிவி. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 8 வது சீசன் படு கோலாகலமாக துவங்கியது.பொதுவாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து யாராவது திறமையான பாடகர்கள் வெளியேறினால் சர்ச்சைகள் ஏற்படுவது வழக்கமான ஒரு விஷயம் தான். அதேபோல இதுவரை நடந்து முடிந்த பல்வேறு சூப்பர் சிங்கர் சீசன்களின் டைட்டில்களை தகுதியானவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் இருந்து தான் வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த வாரங்களுக்கு முன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்ரீதர் சேனா நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.ஸ்ரீதர் சேனா இறுதிச் சுற்றுவரை வருவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது மிகப் பெரிய ஏமாற்றமாக தான் அமைந்திருந்தது. தற்போது 8வது சீசன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் வைல்ட்கார்ட் நிகழ்ச்சி நடைபெற்றது என்பதும் விரைவில் இறுதி போட்டி நடைபெற்று சூப்பர் சிங்கர் டைட்டில் வெல்பவர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற பல பாடகர்களில் ஒருவர் மாளவிகா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மோகன் வைத்யாவின் அண்ணன் ராஜேஷ் வைத்யா அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு புகழ் பெற்றார். இவர் சூப்பர் சிங்கர் சீசன் 6-ல் போட்டியாளராக கலந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் பாடிய 'ஜெகத்குரு எ டிவைன் மியூசிக்கல்' என்கிற பக்திபாடல் ஆல்பம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.



தற்போது மாளவிகா வாழ்வில் மேலும் ஒரு சந்தோஷமான நிகழ்வாக அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, நிச்சயதார்த்த விழா பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. மாளவிகா தனது வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அத்துடன் மாளவிகாவுக்கும் அவருடைய வருங்கால கணவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அவருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை நேரில், வாட்ஸ் ஆப் மூலமும் தெரிவித்து வருகின்றனர். சூப்பர் சிங்கர்... சூப்பர் மனைவியாக வாழ பலரும் தங்கள் வாழ்த்துக்களை இப்போதே தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.