நடிகை சன்னி லியோன் தமிழில் அறிமுகமாகும்  ‘ஓ மை கோஸ்ட்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 


ஆபாச படங்களில் நடித்து கவர்ச்சி நடிகையாக அனைவராலும் அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது இந்தி, தமிழ், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். கணவர், மற்றும் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அவர் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்குவது வழக்கம். இதனாலேயே இவருக்கு ஏராளமனா ரசிகர்கள் உள்ளனர். 






தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான  ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்த அவர் தற்போது முழு நேர கதாநாயகியாக  ‘ஓ மை கோஸ்ட்’ படம் மூலமாக தமிழில் அறிமுகமாக உள்ளார். இந்தப்படத்தில் இவருடன் சதிஷ், யோகிபாபு, ரமேஷ் திலக், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து நடிகை தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்தை  ‘சிந்தனை செய்’ படத்தை இயக்கிய இயக்குநர் யுவன் இயக்கியுள்ளார்.


 






பிரவீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு  அஜீஷ் அசோக் இசையமைத்துள்ளார். ஹாரர் காமெடி படமாக உருவாகியிருக்கும் இந்தப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் இணைந்து தயாரித்து உள்ளனர். முன்னதாக இந்தப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது இந்தப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.


 






இந்த டீசரை பிரபல நடிகரான ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.