நடிகர் சன்னி லியோன் தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ரக்ஷாபந்தனை கொண்டாடினார். கணவர் டேனியல் வெபர் மற்றும் அவர்களின் குழந்தைகளான நிஷா, நோவா மற்றும் ஆஷர் ஆகியோருடன் வீட்டில் அவர்கள் கொண்டாடியதிலிருந்து பல படங்களைப் பகிர்ந்து கொண்டார். புகைப்படங்களில், அவர்களின் மகள் நிஷா, ஃப்ளவர் குர்தா மற்றும் பேன்ட் அணிந்து, தனது இரண்டு சகோதரர்களுக்கு ராக்கி கட்டியிருந்தார். அவர்களும் கலர்ஃபுல்லான குர்தா பைஜாமா அணிந்திருந்தனர்.

Continues below advertisement


சன்னி லியோன் தற்போது, தனது அடுத்த படமான ஸ்ரீஜித் விஜயனின் தமிழ் சைக்கலாஜிகல் த்ரில்லர் ஷீரோ மற்றும் விக்ரம் பட், அனாமிகாவின் எம்எக்ஸ் பிளேயர் வெப் சீரிஸ் பற்றி சனிக்கிழமை இரவு அனைவருடனும் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார். ஒரு சென்ட் கம்பெனி வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்ட சன்னி லியோன், "அனாமிகா நேற்றுதான் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 10 பாகங்கள் கொண்ட வெப் சீரிஸை திரும்பிப் பார்க்கும்போது மகிழ்வாக உள்ளது. இறுதியாக அது நிறைவடைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு நல்ல ஆண்டாக இருக்கும். நான் இதை ஒரு 'வேலையில் மனநிறைவான ஆண்டு' என்று அழைக்கிறேன். 


குட்டநாதன் மார்பப்பா மற்றும் மார்க்கம் காளி போன்ற படங்களை இயக்கிய விஜயன் எழுதிய ஷீரோ தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. சன்னி லியோன் முன்பு இன்ஸ்டாகிராமில் ஷெரோ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக பதிவிட்டிருந்தார். படத்தின் போஸ்டர் சன்னி லியோனை, கோபத்தில் வெறித்தனமாக காயமடைந்த தோற்றத்தில் காட்டுகிறது



ஆக்ஷன் வெப் சீரிஸான ​​அனாமிகாவில் சன்னி லியோன் மற்றொரு கொலையாளியால் குறிவைக்கப்பட்ட ஒரு கொலையாளியாக நடிக்கிறார். இந்தத் தொடரின் இயக்குநரும், பிரபல பட் குடும்பத்தைச் சேர்ந்தவருமான விக்ரம் பட் முன்பு குலாம் மற்றும் ராஸ் ஆகிய படங்கள் மூலம் மக்களுக்கு அறியப்பட்டவர்.


பிரபல நடிகை சன்னி லியோன் கடைசியாக 2014-ஆம் ஆண்டு 'வடகறி' திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்திருப்பார், சசிகுமாருடன் இணைந்து யுவனின் நகைச்சுவை-த்ரில்லரில் சன்னி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதில், டிக்டாக், யூடியூப் புகழ் ஜிபி முத்து ஒரு டாக்டராக நடிக்கிறார், படத்தின் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டது, சன்னி லியோன் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இயக்குநராக தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய சசிகுமார், தனது சொந்த இயக்கமான 'சுப்பிரமணியபுரம்' படத்தில் நடிகராக மாறி, பின்னர் முக்கிய வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். சசிகுமார் அடுத்து ஒரு ஹீரோவாக நடிக்கவேண்டிய படமும் வரிசையில் இருக்கிறது.