கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி  அடுத்த பாத்தகோட்டா கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆய்வு செய்து வருக்கிறார் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர். ஆக. 5- ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு வருகை தந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற  திட்டத்தை  சூளகிரி அடுத்த சாமணப்பள்ளி கிராமத்தில் தொடக்கி வைத்தாா். அன்றைய தினமே 1 லட்சம் தொழிலாளா்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமையும் தொடக்கி வைத்தாா். இந்த திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டத்தில் நேற்று வரை 14, 104  நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர். இதில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 4749  பெரும்  ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 6581 பெரும், சக்கரை மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட 2193 பெரும்,  தீராத நோயால் பாதிக்கப்பட்ட 234  பேர், ஆஞ்சியோ செய்யப்பட்டவர்கள் 346 பேர், டயாலிசிஸ் பாதிக்கப்பட்ட 2 பேர்  பயன்பெற்றுள்ளனர்.



இந்த இரு திட்டங்களும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை ஆய்வு செய்வதற்காக  மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்   சூளகிரி  அடுத்த  பாத்தகோட்டா கிராமத்திற்கு வந்து இங்கு மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் எவ்வாறு செயல்படுகின்றது என்பதையும், அதன் பயனாளிகளை நேரில் சந்தித்து ஆய்வு செய்தனர்,  இந்த கிராமத்தில் 1200 பேர் வசித்து வருகிறார் இங்கு 15 பேருக்கு சக்கரை மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், 4  பேர் மற்ற நேரங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு   நேரடியாக வீட்டிற்கு சென்று  தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கினர். தொடர்ந்து இந்த கிராமத்தில் இன்று  300 பேருக்கு  கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமைத் தொடக்கி வைத்தார்.


அதன்பிறகு செய்தியாளர்களிடம் கூறியபோது, ”மக்களை தேடி மருத்துவம் இந்த திட்டத்தை நாட்டில் முதன்முறையாக தமிழகத்தில்தான் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல்வர்  மு.க. ஸ்டாலின் சூளகிரி அடுத்த சமணப்பள்ளி கிராமத்தில் துவக்கி வைத்தார். அங்கிருந்து காணொளி மூலம்  38 மாவட்டங்களில் 50  ஒன்றியங்களில் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  தமிழகத்தில் மொத்தம் 380 ஒன்றியங்கள் உள்ளன இதில் செப்டம்பர் முதல் வாரத்தில் 120 முதல் 150 ஒன்றியங்களில் இந்த திட்டம் துவக்கப்படும்,  செப்டம்பர் மாதம் இறுதிக்குள் 38 மாவட்டங்களிலுள்ள 380 ஒன்றியங்களிலும் இந்த மகத்தான திட்டம் துவங்கப்படும் என தெரிவித்தார்.



மேலும் மத்திய அரசு செப்டம்பர் மாதம் 1,04,198,170 தடுப்பூசிகளை தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோவிஷீல்ட் 90,24,070 மற்றும் கோவாக் சின் 14,74,100 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் மருத்துவ கல்லூரி அமைக்கப்பட்டுள்ளதால் ஓசூர் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிருஷ்ணகிரியை 2 மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் எனவும் ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் பரிசீலனை செய்து முடிவு செய்வார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளரிடம் கூறினார்.