சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை படத்தின் 4 ஆம் பாகம் இன்று வெளியாகியுள்ள நிலையில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


அரண்மனையும் அதன் பாகங்களும்


கமர்ஷியல் மற்றும் காமெடி படங்களை இயக்கி வந்த சுந்தர் சி, கடந்த 2014 ஆம் ஆண்டு “அரண்மனை” என்ற பேய் படத்தை இயக்கினார். வினய், ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், சந்தானம், மனோ பாலா, கோவை சரளா, நிதின் சத்யா ஆகியோரோடு சுந்தர் சி.,யும் அப்படத்தில் நடித்திருந்தார். பரத்வாஜ் இசையமைத்த இந்த படமானது பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை பெற்று வெற்றி பெற்றது. 


இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு அரண்மனை படத்தின் 2ஆம் பாகம் வெளியானது. இப்படத்தில் சுந்தர் சி, சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, சூரி, மனோபாலா, கோவை சரளா என பலரும் நடிக்க ஹிப் ஹாப் தமிழா இசையமைத்தார். இந்த படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. 






ஆனாலும் மனம் தளராத சுந்தர் சி 2021 ஆம் ஆண்டு அரண்மனை 3-ஆம் பாகத்தை ரிலீஸ் செய்தார். இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்‌ஷி அகர்வால், கோவை சரளா என பலரோடு சுந்தர் சியும் நடித்திருந்தார். சத்யா இசையமைத்த இப்படம் முந்தைய பாகங்களை விட சுமாரான வெற்றியைப் பெற்றது. 


இந்நிலையில் தான் அரண்மனை படத்தின் 4 ஆம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப், தமன்னா, ராஷி கண்ணா, யோகிபாபு, விடிவி கணேஷ் என பலரும் நடித்திருக்கின்றனர். ஹிப் ஹாப் ஆதி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.


தொடரும் பாசிட்டிவ் விமர்சனங்கள் 


அரண்மனை 4 படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி நேற்று திரையிடப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு முதல் காட்சி வெளியானது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது. இதனால் நீண்ட காலமாக வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த சுந்தர் சி சாதித்துள்ளார். பாசிட்டிவ் விமர்சனங்களால் தியேட்டர்களில் டிக்கெட் விற்பனையும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தோடு சென்று மகிழ்ச்சியாக அரண்மனை 4 படத்தை பார்க்கலாம் என பலரும் தெரிவித்துள்ளனர். 




மேலும் படிக்க: அரண்மனை 4! ரசிகர்களை பயமுறுத்தியதா? வெறுப்பேற்றியதா? முழு திரை விமர்சனம் இதோ!