சினிமாவிற்கு இணையாக ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசம் வைத்துள்ளவர்கள் சின்னத்திரை நாயகி மற்றும் நாயகர்கள்தான். அனைத்து வீடுகளிலும் தினமும் தங்களது முகங்களைக்காட்டி பிரபலமாகியிருக்கும் நிலையில் சின்னத்திரை நாயகர்கள் திடீரென விலகினால், புதிய நடிகர்களை  ஏற்றுக்கொள்வதற்கு ரசிகர்களுக்கு சில காலங்கள் எடுக்கும். ஆனாலும் என்ன சிக்கலோ எல்லா சீரியல்களிலும் நடிகர்கள் மாற்றங்கள் அடிக்கடி நிகழ்கின்றன


சன் தொலைக்காட்சியில் 2020ம் ஆண்டு தொடங்கப்பட்ட சீரியல் வானத்தைப் போல. அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் துளசி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவரும்,  சின்ராசு வேடத்தில் தமன் என்பவரும் நடித்து வந்தார்கள். அந்த இருவருமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றார்கள். அவர்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமும் இருந்தது. நன்றாக சென்றுக்கொண்டிருந்தது. 






 


ஆனால் அண்ணனாக சின்னராசு கதாபாத்திரத்தில் நடித்த தமன்குமார்,  சீரியலில் இருந்து விலகினார். முன்னதாக இவரது சகோதரியாக நடித்த நடிகை ஸ்வேதா கெக்லா ( துளசி) வெளியேறினார். ஆனால் இதுவரை ஏன் வெளியேறினார்கள் என்ற காரணத்தை நடிகரோ அல்லது தயாரிப்புக் குழுவினரோ வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதனை அடுத்து புது அண்ணனாக ஸ்ரீகுமார் நடிக்க வந்தார். புது அண்ணன் - தங்கையையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். 300 எபிசோட்களை தாண்டி வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் அடுத்த மாற்றம் ஒன்று நிகழவுள்ளது. தற்போது தொடரில் இருந்து சரவணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவரும் விலகியுள்ளார். இந்த சீரியலில் அடுத்தடுத்து ஏன் இவ்வளவு நடிகர்கள் மாற்றங்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண