சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய (அக்.30) எபிசோடில் அப்பத்தாவின் வீட்டில் பெண்கள் அனைவரும் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருக்கும்போது தர்ஷன் குணசேகரன் தன்னை அடித்ததைப் பற்றி நினைத்து கோபப்படுகிறான். நந்தினியும் அங்கே நடக்கும் அநியாயங்களை பற்றி சொல்லி கொந்தளிக்கிறாள். "திருவிழா முடியட்டும் அனைவரும் வேறு ஒரு நந்தினியை பார்க்கப் போகிறார்கள்" எனக் கொந்தளிக்கிறாள்.




அந்த நேரத்தில் ஜான்சி ராணி வந்து வம்புக்கு இழுக்கிறாள். அப்பத்தா வந்து ஜான்சியை "ஏன் தொந்தரவு செய்யுற" எனக் கேட்கிறார். திருவிழாவுக்கு வந்தவங்களுக்கு கறி விருந்து போட வேண்டும் என வம்புக்கு இழுக்கிறாள்  ஜான்சி. அப்பத்தாவையும் அவள் எதிர்த்துப் பேச கொந்தளித்த சக்தி "மரியாதையா இங்க இருந்து கிளம்பு. மண்டையை பொளந்துருவேன்" என ஆவேசமாகப் பொங்கி எழுகிறான். அவமானப்பட்ட ஜான்சி அங்கிருந்து முறைத்துக்கொண்டு சென்று விடுகிறாள்.  

வளவனும் கரிகாலனும் கதிரைக் காணவில்லை எனக் கொந்தளிக்கிறார்கள். "அவன் ஒரு பொம்பளைகிட்ட போன்ல பேசிகிட்டு இருந்தான். அதை கூட உன்னால கண்டுபிடிக்க முடியவில்லை. நீ எல்லாம் ஒரு போலீஸ்" என கரிகாலன் வளவனைத் திட்ட மாறி மாறி இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.




ஈஸ்வரியின் அப்பா அப்பத்தாவிடம் வந்து இங்க நடப்பது எல்லாம் புதுசா இருக்கு. குணசேகரன் "வாங்க மாமா" என எழுந்து அழைத்தது எனக்கு ஆச்சரியமா இருக்கு. "நீங்க எதிர்பார்க்காத நிறைய விஷயம் நடக்கப்போகுது" என சொல்லி போன் பண்ணி வர சொன்னாரு என ஈஸ்வரியின் அப்பா சொல்கிறார். அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

கெளதம் கதிரை கட்டிப் போட்டு அடைத்து வைத்து இருக்கிறான். "என்னை அவுத்து விடுங்கள் இல்லனா பீஸ் பீஸா போயிடுவீங்க" என கதிர் மிரட்டுகிறான். "இன்னும் அரை மணி நேரத்தில் உன்னை எரித்து சாம்பலாகிடுவேன். உங்க அண்ணன் கதையும் இன்னும் கொஞ்ச நேரத்தில்  முடியப் போகுது" என கெளதம் சொல்ல, கதிர் அப்பவும் திமிராகப் பேசுகிறான்.


 




கெளதம் ஆள் ஒருவன் வெளியில் நிற்பதைப் பார்த்து போலீஸ் வந்து அவனிடம் ஒரு விலாசம் பற்றி விசாரிக்கிறார்கள். அவனை சந்தேகப்பட்ட போலீஸ்காரர்கள் ‘நீ யாரு?’ எனக் கேட்கிறார்கள். "இது என்னுடைய வீடு" என அவன் சொல்ல, போலீஸ் நம்பாமல் அவனை தரதரவென உள்ளே இழுத்து செல்கிறார்கள். கதிரை கட்டிப்போட்டு இருப்பதை பார்த்த போலீஸ் கௌதமையும் அவன் ஆட்களையும் விரட்டிச் செல்கிறார்கள். "என்னை யாராவது அவுத்து விடுங்கள்" எனக் கத்துகிறான் கதிர். அத்துடன் நேற்றைய எதிர்நீச்சல் (Ethirneechal) எபிசோட் முடிவுக்கு வந்தது.