என்னது இரண்டரை ஆண்டுகள் கர்ப்பமா? என்று வாய் பிளக்க வேண்டாம். இது சீரியல் கதை. ஒரு படத்தில் சீரியல் ஸ்க்ரிப்ட் எழுதும் விவேக், போன வாரம் ஹீரோயின் மாடிப்படி ஏறியது போல் காட்டினீர்கள் அல்லவா இந்த வாரம் அவர் மாடிப்படி இறங்கியது போல் காட்டுங்கள் என்பார்.


அது தான் இந்த சீரியலிலும் நடந்திருக்கும் போல. அதனால் தான் இரண்டரை ஆண்டுகளாக கர்ப்பமாக இருந்த சந்திரலேகா சீரியல் நாயகிகளுக்கு குழந்தை இப்போது பிறந்துள்ளது.


இருந்தாலும் சந்திரலேகா சீரியல் தனை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.




சந்திரலேகா சீரியலின் பாப்புலாரிட்டி..
கிட்டத்தட்ட 2200 எபிசோடுகளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது சந்திரலேகா சீரியல். இந்தத் தொடர் சன் டிவியின் மெகாஹிட் சீரியல். மக்களின் மனங்களை வென்ற சீரியல். அதனாலேயே இந்த சீரியல் கடந்த 2014ஆம் ஆண்டு துவங்கி, தற்போது வரை மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. மெட்டி ஒலி, சித்தி, செல்வி, அண்ணாமலை, நாதஸ்வரம், கல்யாணவீடு தெய்வமகள், ரோஜா உள்ளிட்டஏராளமான ஹிட் சீரியல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள சன் டிவி-யில் தினமும் பிற்பகல் 2 மணிக்கு சந்திரலேகா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழ் சீரியல்களில் மிகவும் நீண்ட காலமாக ஒளிபரப்பான சீரியல்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.  இந்த தொடரில் ஸ்வேதா பாண்டிட், நாகஸ்ரீ, முன்னா மற்றும் அருண் குமார் ராஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சரிகம என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. 






இது சன் தொலைக்காட்சி மற்றும் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக 2000 அத்தியாயங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும் தொடர் ஆகும். இந்த சீரியலில் நடித்த ஸ்வேதா பண்டிட் சின்னத்திரை பிரபலங்களில் ஒருவராகிவிட்டார். இந்தக் கதை சுவாரஸ்யமாக செல்வதால் ரசிகர்கள் லாஜிக் மீறல்களைக் கண்டு கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.


இந்நிலையில் தான் அந்த புரோமா வெளியாகியுள்ளது. அதில் சந்திரலேகா சீரியல் நடிகைகளுக்கு எபிஸோடில் குழந்தை பிறந்துவிடுவதுபோல் காட்சி உள்ளது. ரசிகர்கள் அனைவரும் அப்பாடா எனப் பெருமூச்சுவிட்டு எபிஸோடுக்காக காத்திருக்கின்றனர்.