அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா படம் அல்லுவின் ஸ்டைல், ராஷ்மிகாவின் க்ளாமர், சமந்தாவின் ஓ அன்ட்டாவா குத்துப் பாடல் எனப் பல விஷயங்களால் பிரபலமானது. ஆனால் அல்லு அர்ஜூன் தாடியை கோதும் ஸ்டைலும், தோளைத் தூக்கி நடக்கும் ஸ்டைலும் கடல் கடந்து ரசிகர்களைப் பெற்றுவிட்டது. பேன் இந்தியா திரைப்படம், பிரம்மாண்ட கதையம்சம், ஊ சொல்றியா பாடல் என பல எதிர்பார்ப்புகளுடன் புஷ்பா வெளியானது. 


ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அந்த அளவுக்கு படம் பூர்த்தி செய்யவில்லை. இதற்கிடையே படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கிவிட்டது படக்குழு. முதல் பாகம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தவில்லை என்பதால் இரண்டாம் பாகத்தை வெறித்தனமாக எடுத்துவிட வேண்டுமென படக்குழு மெனக்கெட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியாகி பட்டையைக் கிளப்பிய கேஜிஎப் வெற்றியும் புஷ்பா படக்குழுவை சற்று நிதானிக்க வைத்ததாகக் கூறப்பட்டது.  கேஜிஎஃபின் வெற்றிக்கு பிறகு புஷ்பா படக்குழு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகவும், அதன்படி தற்போது படப்பிடிப்புக்கும் ரெஸ்ட் விடப்பட்டதாகவும் கூறப்பட்டது.





அதிகம் எதிர்பார்த்த புஷ்பாவை விட கேஜிஎஃப் அதிக கவனத்தை பெற்றதால்,  புஷ்பா 2வை மிரட்டலாக உருவாக்க வேண்டுமென கதையிலும், மேக்கிங்கிலும் பல மாற்றங்களை கொண்டு வர புஷ்பா இயக்குநர் முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கியுள்ளார் எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலுக்கெல்லாம்  விளக்கம் அளித்துள்ளார் புஷ்பா தயாரிப்பாளர் ரவிசங்கர். பிங்க் வில்லாவுக்கு பேசிய அவர்,  ''அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. புஷ்பாவில் மாற்றம் செய்யுமளவுக்கு கேஜிஎப் என்ன செய்துவிட்டது? எந்த மாற்றமும் இல்லை. எங்களிடம் வெறித்தனமாக ஸ்கிரிப்ட் உள்ளது. அதில் ஏன் மாற்றம் செய்ய வேண்டும்? தொடக்கத்திலேயே வெறித்தனமான ஸ்கிரிப்டை இயக்குநர் சுகுமார் தயார் செய்துவிட்டார்.  அதனை அழகாக படமாக்க வேண்டும். முதல் பாகம் தயாரான அதே காட்டில் தற்போதும் ஷூட்டிங் தொடக்கவுள்ளது'' என்றார்.




முன்னதாக புஷ்பா 2 குறித்து பேசிய நடிகர் அல்லு அர்ஜூன், '' உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். முதல் பாகத்தில் நல்ல அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தை சிறப்பாக கொடுக்க முடியும் என நம்புகிறேன். சிறந்த படத்தைக் கொடுக்கவே நாங்கள் அனைவரும் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம் என்றார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண