பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘தி ஆர்ச்சீஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்தியில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சோயா அக்தர். இவரது இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி ஆர்ச்சீஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படமானது ஆர்ச்சீஸ் காமிக்ஸ் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானா கான், அமிதாபச்சனின் பேரனான அகஸ்திய நந்தா, ஸ்ரீதேவியின் இளைய மகளான குஷி கபூர் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மிஹிர் அஹுஜா, டாட், வேதாங் ரெய்னா, யுவராஜ் மெண்டா ஆகியோரும் நடித்துள்ளனர்.
ரெட்ரோ டைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப்படமானது அடுத்தவருடம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடித்தளத்தில் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ என்னுடைய மற்றொரு மகன் உதயமாகிறான். என்னுடைய பேரன் .. வாழ்த்துகள் அகஸ்தியா..” என்று பதிவிட்டுள்ளார்.
சோயா அக்தர் இயக்கும் இந்தப்படம் குறித்தான அறிவிப்பு கடந்த வருடம் வெளியானது. இந்தப்படத்தின் படப்படிப்பு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது.
சினிமா வாரிசுகளுக்கு ஒருதரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்தாலும் இதுதான் நெப்போட்டிசம், பாலிவுட்டில் வாரிசு வாய்ப்பு தொடர்வதாக பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வருகின்றனர்