தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விமல். பசங்க படம் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, களவாணி, வாகை சூடவா ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது படங்கள் ஏதும் பெரியளவில் வரவேற்பை பெறாத நிலையில், ஓ.டி.டி. தளத்தில் விமல் நடிப்பில் வெளியான விலங்கு சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.


விலங்கு வெப்சீரிஸுக்கு  பிறகு விமல் தான் இழந்த மார்க்கெட்டையும் திரும்ப பெற்றுள்ளார். இந்த வெற்றிக்கு பிறகு நடிகர் விமல் மீது மன்னர் வகையறா படத்தின் தயாரிப்பாளர் சிங்காரவேலன் பணமோசடி வழக்கை தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்கு பிறகு தயாரிப்பாளர் சிங்காரவேலன் கைது செய்யப்பட்டார். 


இந்தநிலையில், நடிகர் விமல் இந்த சர்ச்சைகளுக்கு பிறகு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது பேசிய அவர்," கடந்த 5 முதல் 6 ஆண்டுகள் எனக்கு நிலவி வந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விலங்கு வெப்சீரிஸ் அமைந்தது. தற்போது, அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றும் வருகிறது. 


ஒரு காலத்தில் ஜோசியம் போன்றவற்றில் எனக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அது தற்போது உடைந்தது. கடந்த ஆண்டு ஒரு முறை நான் ஜோசியம் பார்க்க சென்றபோது ஜோதிடர் ஒருவர் என்னிடம், உங்களுக்கு ஏழரை நாட்டு சனி நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் இறுதியில் சனி விலகி 2022 சிறப்பான ஆண்டுகாக அமையும் என்று தெரிவித்தார். அதேபோல், விலங்கு சீரிஸ் நல்ல பெயரை பெற்று தந்தது. 




இந்த சீரிஸ் வெற்றிக்கு பிறகு தற்போது என்னிடம் 6 படங்கள் கைவசம் உள்ளது. அந்தந்த படங்கள் அடுத்தது வெளியாக இருக்கிறது. மற்ற மொழி படங்களில் வாய்ப்பு கிடைத்தால் அதில் நடிப்பது குறித்து யோசிப்பேன்" என்று தெரிவித்தார். 


தொடர்ந்து சர்ச்சை பேசும் தயாரிப்பாளர் கே. ராஜன் மற்றும் பயில்வான் ரங்கநாதன் போன்றவர்கள் குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கும் பதிலளித்த அவர், கே. ராஜன் மற்றும் பயில்வான் ரங்கராஜன் போன்றவர்கள் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. அவர்களுக்கும் ஒரு சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். என்னை பொறுத்தவரை யார் என்ன கருத்து சொன்னாலும் அதை தீர விசாரிக்க வேண்டும். மேலும், இதுபோன்ற கருத்துகள் பேசுபவர்கள் பிறரை மதித்து மரியாதையாக பேசினால் நல்லது. அதையே எப்போதும் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண