சிவகார்த்திகேயன்
தமிழ் திரையுலகில் அடுத்த பெரிய ஸ்டார் நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். கடந்த ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் தமிழைக் கடந்து தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் அவருக்கு பெரியளவில் மார்கெட்டை விரிவுபடுத்தி இருக்கிறது. உலகளவில் ரூ 350 கோடி வரை அமரன் படம் வசூலித்தது. தொடர்ந்து அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களும் அவரது நட்சத்திர அந்தஸ்த்தை உயர்த்தும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகும் எஸ்.கே 25 திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
எஸ்.கே 25 டைட்டில்
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருந்த படம் புறநாநூறு . துல்கர் சல்மான் , நஸ்ரியா , விஜய் வர்மா என இப்படத்தில் பெரிய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டது. இந்தி எதிர்ப்பு போராட்டை மையமாக வைத்து பீரியட் டிராமாவாக இப்படம் உருவாக இருந்தது. இதனைத் தொடர்ந்து சூர்யா இந்த படத்தில் இருந்து விலக மற்ற நடிகர்களும் படத்தில் இருந்து விலகினர். சூர்யாவைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இப்படத்தில் நாயகனாக நடிக்க முடிவாது. ஜெயம் ரவி , அதர்வா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் இணைந்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் படத்தஹி தயாரிக்கிறார்.
எஸ்.கே 25 படத்தின் பூஜை கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்றது. இப்படத்தின் டைட்டில் டீசர் 1 நிமிடம் 50 நிமிடத்திற்கு உருவாகியுள்ளதாகவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இப்படத்திற்கு சிவாஜி கணேசன் நடித்த பராசக்தி படத்தின் பெயர் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் தவிர்த்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். பின் டான் படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி சிவகார்த்திகேயனின் 24 ஆவது படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்திற்கு பாஸ் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது