எஸ்.கே 25 டைட்டில் டீசர்
அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்தை சுதா கொங்காரா இயக்குவதாக முடிவானது. ஜெயம் ரவி இப்படத்தில் வில்லனாக நடிக்கும் நிலையில் அதர்வா சிவகார்த்திகேயனின் சகோதரனாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் குமார் படத்திற்கு இசையமைக்கிறார். டான் பிக்ச்சர்ஸ் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். எஸ்.கே 25 படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியிட்டுள்ளது படக்குழு. அதன்படி இப்படத்திற்கு பராசக்தி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து பீரியட் டிராமாவாக இப்படம் உருவாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் , அதர்வா , ஜெயம் ரவி என என மூன்று பேரும் இந்த டீசரில் தனித்தனி லுக்கில் அசத்தியிருக்கிறார்கள். குறிப்பாக லுக் முதல் உடல்மொழி வரை இந்த படத்திற்கு என சிவகார்த்திகேயன் தனது நடிப்பில் மாற்றங்கள் செய்துள்ளார். அமரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனை இந்தபடம் ஒரு படி மேல் உயர்த்தும் என்று எதிர்பார்க்கலாம் என்பதை இந்த டைட்டில் டீசர் உறுதிபடுத்தியுள்ளது.