சூரரைப் போற்று


சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்துக் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று.  அபர்னா பாலமுரளி, ஊர்வஷி, பரேஷ் ராவல் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். சூரரைப் போற்றுத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன.


கேப்டன் ஜிஆர் கோபிநாத் எழுதிய சிம்பிளி ஃப்ளை (வாழ்க்கை கதை) புத்தகத்தில் இருந்து முக்கியமான சம்பவங்களை மட்டும் எடுத்து அதை, திரைக்கதையாக அமைத்து நல்ல மோட்டிவேஷனல் கதையாக சொல்லி இருந்தார் சுதா கொங்கரா. 


நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில், ஆக்ரோஷமான இளைஞராகவும்,கனவின் மீது தீரா தாகம் கொண்டவராகவும் சூர்யா வெளிப்படுத்திய நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக, தனது தந்தையை பார்க்க ஃப்ளைட்டில் செல்வதற்காக காத்திருப்பு அறையில் ஒவ்வொருவரிடம் காசு கேட்கும் காட்சியாகட்டும், இடைவேளை காட்சியில் தனது மொத்த கனவும் சிதைந்து போகும் நிற்கதியாய் நின்று, சூர்யா கொடுத்த நடிப்பாகட்டும், தன்னுடைய கனவின் தேவைக்காக மனைவிடம் கடன் கேட்கும் காட்சியாகட்டும், இறுதியில் தனது கிராம மக்களையும், தனது அம்மாவையும் தனது சொந்த ஃபிளைட்டில் ஏற்றி சாதித்து காட்டும் காட்சியாகட்டும் அனைத்திலும் தன்னுடைய வெற்றியின் தாகத்தை பிரதிபலித்திருந்தார் சூர்யா.


சூர்யா மகிழ்ச்சி


சூரரைப் போற்றுத் திரைப்படம் மூன்றாவது ஆண்டை நிறைவு செய்வதைத் தொடர்ந்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் சூரரைப் போற்று படத்தின் காட்சிகளைப் பகிர்ந்து பதிவிட்டுள்ளார். இந்தப் பயணத்தில் எங்களுடன் இருந்த ரசிகர்களுக்கு நன்றி என்று சூர்யா தெரிவித்துள்ளார்.


சூர்யா 43






சுதா கொங்காரா மற்றும் சூரியா ஆகிய இருவரின் இரண்டாவது கூட்டணியில் உருவாகும் படம் தான் சூர்யா 43. புறநாநூறு என்று இந்தப் படத்திற்கு பெயர் வைக்கப் பட்டுள்ளது. துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம், விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில்  நடிக்க இருக்கிறார்கள். ஜி.வி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் இந்தப் படத்தில் டைட்டில் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.