Lal Salaam Teaser: கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் இந்து, முஸ்லீம்களுக்கு கலவரம் வெடிக்க அவர்களை கட்டுப்படுத்தும் கேங்ஸ்டராக ஆக்ஷனில் அசத்தும் காட்சிகள் லால் சலாம் படத்தின் டீசரில் இடம்பெற்றுள்ளன.
லால் சலாம் படத்தில் முக்கிய கேரக்டரில் மொய்தீன் பாயாக ரஜினிகாந்த் நடித்துள்ளார். முன்னதாக ரஜினியின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது. இந்த நிலையில் இன்று ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து கொண்ட ரஜினி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், ” வரும் பொங்கலுக்கு லால் சலாம் படத்தின் மூலம் உங்களை சந்திக்கிறேன். மொய்தீன் பாயாக...குதாஃபிஸ்” என கூறியுள்ளார்.
இதற்கிடையே லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. அதில், விக்ராந்த மற்றும் விஷால் விஷ்ணு தலைமையில் கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. அதில், இது சாதாரண விளையாட்டு இல்லை. இது இரு வார்...இந்தியா - பாகிஸ்தான் போட்டி போன்ற வசனங்களுக்கு இடையே, படத்தில் விளையாட்டுகளுக்கு இடையே பற்றி எரியும் வன்முறை காட்சிகளும், அதனால் ஏற்படும் சில மரணங்களும் இடம்பெற்றுள்ளன. பின்னர், வன்முறையில் ஈடுபடுவோரை தட்டி அடக்கும் ஒரு தாதாவாக ரஜினி அறிமுகம் இடம்பெறுகிறது. ரஜினியின் மாஸ் என்ட்ரிக்கு பிறகு “விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க”, “குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சுருக்கீங்க” என ரஜினி பேசும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமில்லாமல் டீசரில் ராமையா, கே.எஸ். ரவிக்குமார் மற்றும் செந்தில் உள்ளிட்டோரின் காட்சிகளும் கவனத்தை ஈர்த்துள்ளன. இதற்கெல்லாம் மேலாக, விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்டோரின் காட்சிகளும் பேச வைத்துள்ளன.
தனுஷ் நடித்த ’3’ படத்தையும், கவுதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார். திருவண்ணாமலை பகுதியில் நடந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து கிரிக்கெட்டை மையமாக வைத்து கொண்டு லால் சலாம் படத்தின் கதை எடுக்கப்பட்டுள்ளது. விக்ராந்த், விஷ்ணு விஷால் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தை லைகா சார்பில் சுபாஷ்கரன் தயாரித்துள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் உருவான லால் சலாம் படத்தின் தமிழ் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதன் படப்பிடிப்புகள் பெங்களூரு, ஐதரபாத், சென்னை, திருவண்ணாமலை, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.
மேலும் படிக்க: Lal Salaam Teaser: கிரிக்கெட்டில் மதம்.. மொய்தீன் பாயாக தட்டிக் கேட்க வரும் ரஜினி.. ‘லால் சலாம்’ டீசர் வெளியீடு!