தென்னிந்திய சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மிகவும் பிரபலமான ஒரு பாடகியாக வலம் வருபவர் சுசித்ரா (Suchitra). இவருக்கும் நடிகர் கார்த்திக் குமாருக்கும் கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இருவரும் 12 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சுச்சி லீக்ஸ் சர்ச்சைக்கு பின் அவர்கள் இருவர் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். 


சமீபகாலமாக திரைத்துறையை சேர்ந்த பலரைப் பற்றியும் அவதூறான கருத்துகள், விஷயங்களை சுசித்ரா பேசி வருவது பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இது குறித்து நடிகை கஸ்தூரி தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்து இருந்தார். "மற்றவர்கள் மீது வீண் குற்றங்களை சுமத்தி வருகிறார். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி மற்றும் மனநல உதவி தேவைப்படுகிறது. அவரை வழிகாட்ட சரியான ஒரு துணை இல்லாததால் தான் வீடியோ மூலம் வாய்க்கு வந்தது எல்லாம் பேசி வருகிறார்.  


 




கார்த்திக் குமாருக்கும் சுசித்ராவுக்கும் திருமணம் நடைபெறும்போதே சுசித்ராவின் பெற்றோர் உயிருடன் இல்லை. அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்கள். அவர்களின் குடும்பம் அடிப்படையிலேயே எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க முடியாமல் உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு சென்றவர்கள். அதே போல சுசித்ராவுக்கும் வழிகாட்ட சரியான ஒரு நபர் இல்லை என்பது தான் பிரச்சினை" என கஸ்தூரி நீளமான போஸ்ட் மூலம் சுசித்ராவை பயங்கரமாகத் தாக்கி இருந்தார். 


தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து தன்னுடைய யூட்யூப் பக்கத்தில் சுசித்ரா பகிர்ந்துள்ளார். கஸ்தூரி சுசித்ராவின் அப்பா அம்மா தற்கொலை செய்து கொண்டார்கள் என கூறியுள்ளது பற்றின உங்களின் கருத்து என்ன என அதில் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சுசித்ரா "நிச்சயமாக இது உண்மை இல்லை. எங்க அம்மா அப்பாவைப் பற்றி தப்பா பேசிய அந்த அம்மாவுக்கு அசிங்க அசிங்கமா சாவு வரப்போகுது. கஸ்தூரியை என்னென்ன கெட்டவார்த்தைகளால் திட்டலாம் என யோசித்துக் கொண்டு இருக்கிறேன்.


ஆனா அந்த பொறுப்பை வேற யாருக்காவது கொடுத்து விடுகிறேன். உனக்கு அசிங்க அசிங்கமா கிடைக்கப் போகுது. உன்னை அப்படினு தான் சொல்லுவேன். வனிதா, பயில்வானை கூட உங்களை என சொல்வேன். ஆனா இந்தக் கஸ்துரியை உன்னனு தான் சொல்வேன். காக்காவ விட மோசமானவ நீ. நீ செத்து போன காக்கா போடி.. அப்படினு தான் சொல்ல தோணுது.


எங்க அம்மா அப்பா பத்தி சொன்னது உண்மையில்லை. அவங்க ஒரு ஆக்சிடெண்டில் இறந்து போனாங்க. அவங்களை பத்தி இப்படி தப்பா பேசுறது சரியில்லை. கஸ்தூரி திரும்பவும் ஸ்கூலுக்கு போய் மாரல் சயின்ஸ் கிளாஸ் அட்டென்ட் பண்ணு" என சுசித்ரா கொந்தளித்துள்ளார்.


 


 


இந்த வீடியோ பரபரப்பைக் கிளப்பும் வகையில் அமைந்து இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.