Continues below advertisement

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விரைவில் துவங்க இருக்கும் நிலையில் அது குறித்த பேச்சுக்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் அடிபட்டு வருகின்றன. தமிழில் இந்த ரியாலிட்டி ஷோ துவங்கிய நாள் முதல் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு இருந்தாலும் கமலின் பேஸ் வேல்யூவுக்காகவே பலரும் இந்த நிகழ்ச்சியை தவறாமல் பார்த்து வந்தார்கள். இந்நிலையில் இந்த சீசனை தன்னால் தொகுத்து வழங்க இயலாது என கமல்ஹாசன் அறிக்கையின் மூலம் தெரிவித்த நிலையில் அடுத்து வரும் பிக் பாஸ் சீசனை யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற கேள்வி எழுந்தது. 

 

Continues below advertisement

 

நடிகர் கமல்ஹாசன் பதிலாக நடிகர் சிம்பு, சரத்குமார், நயன்தாரா, விஜய் சேதுபதி இவர்களில் யாராவது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது படங்களில் பிஸியாக ஈடுபட்டுள்ளதால் அவரால் பிக் பாஸ்  நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக நயன்தாராவும் இந்நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்வதில் சந்தேகம் தான். கமல்ஹாசனே ஏராளமான ட்ரோல்களை  சந்தித்துள்ள நிலையில் நயன்தாரா இதில் கமிட்டாவதற்கு லெஸ் சான்ஸ் தான் உள்ளது என கூறப்படுகிறது. 

 

இப்படிப்பட்ட சூழலில் நடிகர் விஜய் சேதுபதி தான் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார் என்பது பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் வழக்கம் போல சர்ச்சையை கிளப்பியுள்ளார் சுசித்ரா. அவரின் முன்னர் கணவரும் நடிகருமான நடிகர் கார்த்திக் இந்த பிக் பாஸ் சீசனில் போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளார் என கூறப்பட்டது. இது குறித்து சுசித்ரா பேசியுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "விஜய் சேதுபதி பிக் பாஸ் 8 ஹோஸ்ட்டா? எட்டுன்னு நம்பர் வந்தாலே அந்த பக்கம் போக கொஞ்சம் தயங்குமே. ஆனால் போட்டியாளர்கள் லிஸ்டில் கார்த்திக் குமார் இருக்காரே. ஆனா கார்த்திக் குமார் ஹேட்ஸ் விஜய் சேதுபதி" என சுசித்ரா பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.