பாலாவுக்கும் சூர்யாவுக்கும் இடையே  ‘வணங்கான்’ படப்பிடிப்பில் மோதல் நடந்ததாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து அந்தப்படத்தின் சண்டை இயக்குநர் சில்வாவிடம் கேட்கப்பட்டது.


அது குறித்து பேசிய சில்வா, “ பாலாவுக்கும் சூர்யாவுக்கும் மோதல் போக்கு என்பதெல்லாம் ஒன்றுமில்லை. படம் ரொம்ப நல்லா நடந்துகிட்டு இருக்கு. கன்னியாகுமரிக்கு போய் ரெண்டு ஃபைட் முடிச்சிட்டு வந்தோம். அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க. சூர்யா வெகேஷன் போயிருக்காரு.




 


அவர் வந்த உடனே ஷூட்டிங் ஆரம்பிக்கப் போறோம். உண்மையில பாலா சார் ஒரு பேபி. குழந்தை மாதிரி வேலை வாங்குறாரு. அவர டெரர்னு எல்லாரும் சொல்றாங்க. ஆனா உண்மையில அவர் சாஃப்ட்டான கேரக்டர். அவர் ஃபைட் ரியலிஸ்டிக்கா வரனும்னு சொல்லுவாரு. சூர்யா ஒரு விஷயம் பண்ணாரு அப்படின்னா 1000 சதவீதம் கவனம் செலுத்தி பண்ணுவாரு. விக்ரம் படத்துல அவரோட கெட்டப்ப பார்த்து மிரண்டுட்டேன்.” என்று பேசினார்.  


 


எதற்கு துணிந்தவன் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா , இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை சொல்லவே தேவையில்லை. சூர்யாவின் 41 வது படமாக உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்க , ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரித்து வருகின்றனர். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளையும் வாழ்வியலையும் அப்படியே படமாக்குபவர் இயக்குநர் பாலா.


 






இந்நிலையில், இயக்குநர் பாலாவின் பிறந்தநாளானன்று வணங்கான் போஸ்டர் வெளியிடப்பட்டது.  இதுகுறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பாலாவுக்கு வாழ்த்து தெரிவித்து உங்களுடன் இணைந்ததில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டு இருந்தார்.


 


 






நடிகர் சூர்யாவிடம் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே மாறும் வித்தையை சூர்யா கற்றுக்கொண்டது 2001ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தில். அவருக்கு கற்றுக்கொடுத்தது இயக்குநர் பாலா. அதன் பிறகு பாலா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளியான  'பிதாமகன்' படத்தில் சூர்யா தனது நடிப்பில் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தார். இதன் காரணமாக பாலா மீது சூர்யாவுக்கு எப்போதும் தனி பிரியமும், மரியாதையும் எப்போதும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் 'அவன் இவன்' திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்தது.இந்தநிலையில், நடிகர் சூர்யா 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் கைகோர்ப்பது குறிப்பிடத்தக்கது.