நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் மகாபலிபுரத்தில் ஜூன் 9ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சுமார் 25 கோடிக்கு நயன்தாரா திருமண நிகழ்ச்சி விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதன் காரணமாக எந்தவொரு புகைப்படங்களும் வீடியோக்களும் திருமண நிகழ்வின் போது வெளியே கசியவில்லை. திருமண நிகழ்ச்சிக்கு வருபவர்கள், இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்றும் செல்போன் உள்ளிட்ட எந்தவொரு டிஜிட்டல் கேஜெட்டுகளையும் கொண்டு வரக் கூடாது என்றும் பார்கோடு ஆக்டிவேட் ஆனால் தான் அனுமதி என்றும் ரசிகர்கள் உள்ளே நுழைய அனுமதியே கிடையாது என்றும் கடும் கட்டுப்பாடுகள் விதித்தனர்.






பிரம்மாண்டம்


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்த திருமணம், பிரம்மாண்டமாக மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது. இவ்வளவு பிரம்மாண்டமான திருமண விழா அரங்கு எப்படி டெக்கரேட் செய்யப்பட்டிருந்தது என்பது மிகவும் ஸ்வாரஸ்யமான விஷயம். நாமும் நமது திருமணங்களில் இது போன்ற டெக்னீக்குகளை பயன்படுத்தினால் நம் திருமணத்தையும் இது போல பிரம்மாண்டமாக காட்டலாம், அதற்கு இது போல செலவாகுமா என்றால், இல்லை. குறைந்த பட்ஜெட்டிலேயே நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் போல நடத்தலாம். 



பூக்கள்


வெள்ளை மற்றும் மஞ்சள் நிற பூக்கள் கொண்டு சிம்பிளாக, அழகாக நிறைத்திருந்தனர் திருமண அரங்கை. பொதுவாக லோ பட்ஜெட்டுக்கு, பிளாஸ்டிக் மலர் டிசைன் சிறந்தது தான், கண்கவர் தோற்றமளிக்கும் அதே வேளையில், இந்த பிளாஸ்டிக் மலர் அலங்காரப் போக்கு மாற்றப்பட்டு, உண்மையான பூக்கள் கொண்டு அலங்கரிப்பது இன்னும் பசுமையான லுக்கை தரும். அதுமட்டுமின்றி நயன்-விக்கி திருமணத்தில் இன்னும் புதுமையான விஷயங்கள் கொண்டு அலங்கரிக்க பட்டு இருந்தது. பாம்பாஸ், உலர்ந்த இலைகள், மேசன் ஜாடிகள் மற்றும் வாசனை மெழுகுவர்த்திகள் ஆகியவை கூட வைத்திருந்தார்கள். இவை நம் விழா அரங்கை இன்னும் க்ளாசிக்காக மாற்றும்.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


லைட்ஸ்


நீங்கள் கனவு காணும் பிரம்மாண்ட திருமணத்தை நடத்த விரும்பினால் வண்ணமயமான பிரம்மாண்ட விளக்குகள் முக்கியம். நயன்-விக்கி இந்த விளக்குகள் விஷயத்தில் ஒரே மாதிரியான பெரிய, வார்ம் டோன் விளக்குகளை பயன்படுத்தியுள்ளனர். இந்த விளக்குகள் நம் அரங்கை அழகுபடுத்துவது மட்டுமின்றி, புகைப்பட கலைஞர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இது போன்ற வெளிச்சங்களில் புகைப்படம் எடுத்தால் சுமாரான ப்ரேம்கள் கூட சூப்பர் போட்டோவாக மாறும். 






கண்ணாடி தரை


திருமணத்தை, அழகாக பிரம்மாண்டமாக காட்டுவதற்கு முக்கியமான விஷயங்களில் ஒன்று மினிமலிசம். நாம் எதை செய்தாலும் கூடுதலாக செய்ய வேண்டும் என்ற எண்ணமே இருக்கக் கூடாது. எல்லாமே அளவாக இருத்தல் அவசியம். நல்ல பூக்கள், நல்ல விளக்குகள் இட்டதற்கு பிறகு, தரையை எதைக்கொண்டு அலங்கரிக்கலாம் என்ற கேள்வி எழும். பொதுவாக ரெட் கார்பெட் ஒரு சிக்னேச்சர் அடையாளம். ஆனால், நயன்தாராவின் புடவையும் ரெட் என்பதால் அதையே பயன்படுத்த முடியாது. ரெட் கார்பெட்டை விட சிறந்த ஐடியாதான் நயன்-விக்கி திருமணத்தில் பயன்படுத்தப் பட்டது. நாம் செய்த மினிமல் டிசைனையே, அதே அழகோடு இரட்டிப்பாக்கி காட்டுவதற்கு ஒரே வழி தரையை கண்ணாடி போல பளபளப்பாக செய்துவிடுவதுதான். அதையே இவர்களும் செய்திருந்தனர்.