சிம்பு நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளிவந்த ‘பத்து தல’ வரும் 23ஆம் தேதி முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. 


கிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவுதம் மேனம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த  ‘பத்து தல’ கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியானது. ஞானவேல் ராஜா தயாரிப்பில் அதிரடி ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளியான பத்து தல படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்து இருந்தார். முஃப்டி என்ற கன்னட படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட பத்து தல, படத்துக்கு தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் கிடைத்தது. சிம்புவின் மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்களின் வரிசையில் வெளிவந்த பத்து தல படமும் ஹிட் லிஸ்டில் பெற்றது. 


சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் காட்டி இருக்கும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடினர்.  மணல் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பத்து தல படத்தில் சிம்பு ஏ.ஜி.ஆர் என்ற கேரக்டரில் மாஸ் அவதாரத்தில் நடித்திருந்தார். திரையில் வெற்றிப்பெற்று வசூல் சாதனை படைத்த பத்து தல, ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்றது.  இந்நிலையில், ஏப்ரல் 27ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியான பத்து தல, சின்னத்திரைக்கும் வருகிறது. வரும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு ஜீ தமிழில் பத்து தல படம் ஒளிப்பரப்பப்பட உள்ளது. 






பத்து தல வெற்றிக்குப் பிறகு தேசிங்கு பெரியசாமி இயக்கும் STR43 படத்தில் சிம்பு நடித்து வருகிறார். அந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.