லவ்வர் படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியடையும் என்று இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ட்வீட் வெளியிட்டுள்ளார்.


லவ்வர்


குட் நைட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்திருக்கும் படம் லவ்வர். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஸ்ரீ கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி,  ஹரிஷ் குமார்,  கீதா கைலாசம், ஹரிணி , நிகிலா சங்கர்,  அருணாசலேஸ்வரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.


அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் படத்தின் டீசர் வெளியானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வரவேற்பைப் பெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி வேலண்டைன்ஸ் வார ஸ்பெஷலாக இப்படம் திரையரங்கில் வெளியாகிறது.


சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. எளிமையான ஒரு காதல் கதை. அதில் காதலர்களுக்கு நடுவில் ஏற்படும் பிரச்னைகளை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ளது. இப்படத்தில் நிறைய இடங்களில் நடிகர் மணிகண்டன் ஆபாச வார்த்தைகள் பேசும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மிக ஆர்வமாக குறிப்பாக இளைஞர்கள் இப்படத்தை எதிர்பார்த்து வரும் நிலையில் லவ்வர் படத்தின் சிறப்பு திரையிடலைப் பார்த்த விமர்சகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் இப்படத்திற்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.


எஸ்.டி ஆர் இயக்குநர் பாராட்டு


இந்நிலையில், லவ்வர் படத்தைப் பாராட்டி இயக்குநர் தேசிங்கு பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “லவ்வர் படம் மிக நேர்த்தியாகவும் திரைக்கதை இயல்பாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. படத்தில் நடித்த மணிகண்டன் மற்றும் நடிகை கெளரி பிரியா இருவருமே கலக்கிட்டீங்க. கண்ணன் ரவியின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாகவும் புதுமையாகவும் இருக்கிறது. நிச்சயம் இப்படம் சிறப்பான வெற்றிபெறும்." என்று கூறி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.






எஸ்.டி ஆர் 48


‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார் தேசிங்கு பெரியசாமி. தற்போது ராஜ்கமல் தயாரிப்பில் சிலம்பரசன் நடிக்கும் எஸ்.டி. ஆர் 48 படத்தை இயக்குகிறார். சிலம்பரசன் இரண்டு கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்க இருக்கிறார், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.