ஸ்டார் - கவின்
விஜய் தொலைக்காட்சி கனா காணும் காலங்கள் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானாவர் கவின் . பிக்பாஸில் கலந்துகொண்டு பரவலான கவனம் பெற்றார். கடந்த ஆண்டு கவின் நடித்த டாடா படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கவின் நடித்துள்ள படம் ஸ்டார். பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளம் இப்படத்தை இயக்கியுள்ளார். லால் , அதிதி போஹன்கர் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்டார் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகனாக வேண்டும் என்கிற ஒருவனின் கனவை பிரதிபலிக்கும் படமாக ஸ்டார் படம் உருவாகியுள்ளது. மூன்றுக்கும் மேலான கெட் அப் களில் இப்படத்தில் நடிகர் கவின் நடித்துள்ளார். ரசிகர்கள் முதல் நடிகர்கள் வரை இப்படத்தின் டிரைலரை அனைவரும் பகிர்ந்து பாராட்டி வருகிறார்கள்
அஜித் விஜய் படம் பார்த்து தயார்படுத்திக் கொண்டேன்
ஸ்டார் படத்தின் ப்ரோமோஷன்களை தொடங்கியுள்ளார் கவின் . தனது சினிமா பயணம் பற்றி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். நேர்காணல் ஒன்றில் ஒவ்வொரு படத்திற்கு முன்பாக தன்னை எப்படி தயார் படுத்திக் கொள்கிறார் என்பதை நடிகர் கவின் பகிர்ந்துகொண்டுள்ளார்.
டாடா படத்தில் நடிப்பதற்கு முன்பாக அஜித் நடித்த முகவரி படத்தையும் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தையும் பார்த்துவிட்டு தன்னை தயார்படுத்திக் கொண்டதாகவும் கூறினார். அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் தங்களது தொடக்க காலத்தில் ரசிகர்களை உணர்வுப்பூர்வமாக தொடும் வகையிலான படங்களில் நடித்துதான் இன்று மிகப்பெரிய ஸ்டார்களாக இருக்கிறார்கள். அவர்களின் வழியில் வரும் தான் அவர்கள் படங்களைப் பார்த்து நிறைய முயற்சிகளை செய்து பார்ப்பதாக கவின் தெரிவித்துள்ளார்.
இதே போல் லிஃப்ட் படத்தில் நடித்த போது விஜய் சேதுபதி நடித்த பீட்சா மற்றும் இந்தியில் வெளியான ட்ராப்டு படம் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார். தற்போது நடித்துள்ள ஸ்டார் படத்திற்கா இந்தியில் ரன்பீர் கபூர் நடித்த சஞ்சு படத்தை பார்த்து தன்னை தயார்படுத்திக் கொண்டதாக கவின் தெரிவித்தார். நடிகர் சஞ்சய் தத் வாழ்க்கையை பல்வேறு காலக்கட்டங்களில் இப்படம் காட்டும் , இப்படத்தில் தந்தை மகனுக்கு இடையிலான உறவை இப்படம் காடியவிதம் தன்னை கவர்ந்ததாக கவின் தெரிவித்தார்.