மார்வல் உலகில் இன்று ப்ளாக் பேந்தர், ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் என பல விதமான படங்கள் வந்தாலும், அதற்கெல்லாம் அடித்தளமாக அமைந்தது மார்வல் காமிக் புத்தகங்கள்தான். இந்த புத்தகங்கள், படங்கள் அனைத்தும் ஹிட் ஆக காரணமாக அமைந்தவர், ஸ்பைடர் மேன்,தோர், எக்ஸ் மேன் போன்ற பல சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய ஸ்டான்லீதான்.


ஹீரோக்களை உருவாக்கிய ஹீரோ!


உலகம் முழுவதும், இன்று வளர்ந்து பெரிய ஆளாக நிற்கும் 90’ஸ் கிட்ஸ் அனைவர் மனதிற்குள்ளும் “நான் ஒரு சூப்பர் ஹீரோவாக வேண்டும்” என்ற எண்ணம் கண்டிப்பாக உருவாகியிருக்கும். இதற்கு காரணமாக அமைந்தது மார்வல் படங்கள்தான். ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, ஆண்ட் மேன், ப்ளாக் பேந்தர், கேப்டன் மார்வல், ப்ளாக் விடோ என பல சூப்பர் ஹீரோக்களை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை, ஸ்டான்லீயையே சாரும். 




Timely Publications என்ற சிறிய ரக பதிப்பக நிறுவனத்தை, ஸ்டான்லீயின் குடும்பம் நடத்தி வந்தது. ஸ்டான்லீ மார்வல் காமிக் புத்தகங்கள் உருவாக்க ஆரம்பித்தவுடன், அது மார்வல் காமிக்ஸ் என பெயர் மாற்றப்பட்டது. எந்த மார்வல் படங்கள் வெளியானாலும், வசூலில் சக்கை போடு போட்டுவிடும் என்பது பலரும அறிந்த கதை. ஆனால், மார்வல் புத்தகங்கள் கூட தொடர்ந்து 20 வருடங்களுக்கு, முன்னணி காமிக் புத்தகமாக இருந்து வந்தது. இன்றும் கூட, டிஜிட்டல் வடிவில் பலரால் பகிரப்படும் காமிக் புத்தகங்களுள் மார்வல் புத்தகங்களும் ஒன்று. 


காமியோ ரோலில் ஸ்டான்லீ 


ஸ்டான்லீ, 1990 ஆம் ஆண்டிலேயே மார்வலிலிருந்து விடைப்பெற்றுக்கொண்டார் ஸ்டான்லீ.  மார்வல் உலகை உருவாக்கிய அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இவருக்கென ஒரு காட்சி, தவறாமல் எல்லா மார்வல் படங்களிலும் இடம் பெற்றிருக்கும். ஸ்பைடர்மேன், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா என பல படங்களிலும், ஏதாவது ஒரு காட்சியில் கேமியோ ரோலில் நடித்திருப்பார் ஸ்டான்லீ. 95 வயதானாலும், குழந்தை மனம் கொண்ட ஸ்டான்லி இதயக்கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக 2018 ஆம் ஆண்டு கலிஃபோர்னியா மாகாணத்தில் காலமானார். இவரது இழப்பை இன்றளவும் மார்வல் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 




ஸ்டான்லீ-அறிந்ததும் அறியாததும்


ஸ்டான்லீயைப் பற்றி பலரும் அறியாத தகவல்கள் சிலவற்றை காண்போம்...



  • ஸ்டான்லீ, முடிவெட்டும் சலூனிற்கு சென்றதே இல்லையாம். அவரது மனைவி ஜோனிதான்,என்றுமே ஸ்டான்லீயின் முடியை வெட்டுவாராம். 

  • ஸ்டான்லீ, கதைகள் எழுதுவதற்கு முன்னாள், நாளிதழ்களில் வரும் இரங்கள் விளம்பரங்களை எழுதினாராம். இது அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தியதால், அந்த வேலையை விட்டுவிட்டாராம். 

  • ஒரு நாளிதழில் ஸ்டாலீக்கு 2 பக்க அளவிற்கு கேப்டன் அமெரிக்கா காமிக்ஸை எழுதும் வாய்ப்பு கிடைத்தது. இந்த காமிக்ஸ்தான் இவரை முதலில் பெருமைப் படுத்தியது.

  • மார்வல் ஹீரோவான ஹல்கின் நிறம் க்ரே (சாம்பல் நிறம்) நிறத்தில்தான் முதலில் இருந்தது. ப்ரின்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஹல்கின் நிறம் பச்சையாக மாறியதாம். இதை, ஸ்டான்லீ ஒரு நேர்காணலின்போது குறிப்பிட்டிருந்தார்.

  • ஸ்டான்லீ, அவரது குடும்பத்தினருடன் லாஸ் ஏஞ்சலீஸிற்கு குடிபெயர்ந்தார். அங்கே பல நேர்காணல்கள் மற்றும் புத்தகங்களை சேகரித்து வைக்க ஸ்டுடியோ ஒன்றை அமைத்தார். ஒரு தீ விபத்தில் அந்த ஸ்டுடியோ எரிந்து விட்டதாம்.

  • வித்தியாசமாக கதைகளை அமைப்பது, க்ரீயேட்டிவாக கதாப்பாத்திரங்களை உருவாக்குவது போன்ற திறமைகளை தனது தாயிடம் இருந்துதான் ஸ்டான்லீ கற்றுக் கொண்டாராம்.