எல்லை மீறும் ஸ்டாண்ட் அப் காமெடியன்ஸ்

வட மாநிலத்தில் மிகப்பெரிய யூடியூபரான ரன்வீர் அல்லாவாதியா நிகழ்ச்சி ஒன்றில் ஆபாசமான கருத்துக்களை பேசியதால் சர்ச்சையில் சிக்கினார். அதிகாரத்தை விமர்சிக்கு ஒரு கலை வடிவமாக ஸ்டாண்ட் காமெடி கருதப்படுகிறது. ஆனால் சமீபத்தில் ஸ்டாண்ட் காமெடி என்றாலே ஆபாச வார்த்தையும் சர்ச்சை பேச்சும் என்று மட்டுமே மாறிவிடுகிறது. காமெடி இருக்கோ இல்லையோ பொது நம்பிக்கைகளுக்கு எதிராக நகைச்சுவை அடிப்பதோ , ஆபாசமாக பேசுவதற்கு கைதட்டல்கள் பறக்கின்றன.

பெரியாரை பற்றி சர்ச்சை கருத்து சொன்ன ஸ்டாண்ட் அப் காமெடியன்

இந்தியைப் போல தமிழிலும் சில காமெடியன்ஸ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லி மாட்டியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஃபயஸ் ஹூஸ்ஸைன் என்பவர் பெரியார் மணியம்மையை வைத்து அடித்த ஜோக் பெரும் எதிர்ப்புகளை சந்தித்தது. இதைத் தொடர்ந்து கொஞ்ச நாட்களுக்கு அமைதியாக இருந்த அவர் தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்து படி பேசியுள்ளார் 

தனது காமெடிக்கு சிரிப்பு வரவில்லை என்று சொல்பவர்களை 200 பேர் அமர்ந்திருக்கும் நிகழ்ச்சியில் கெட்ட கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டியுள்ளார். அவரே ஒரு ஆளை செட் செய்து கூட்டத்தில் அமரவைத்து தன்னை சமூக வலைதளத்தில் விமர்சிப்பவர்களை மறைமுகமாக தாக்கவே இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார் என பலர் தெரிவித்து வருகிறார்கள். காமெடி நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை என்றுதான் சொல்ல முடியும் ரசிகர்கள் அவரை திட்டி வருகிறார்கள்.