Top 10 News Headlines: ”உரிமை போராட்டத்தை தமிழ்நாடு நடத்தும்” புது வரலாறு படைத்த ரோகித்- டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today Mar 05: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

அனைத்துக்கட்சி கூட்டம் - ஸ்டாலின் பேச்சு
தொகுதி மறுவரையறை தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் பேசும்போது, தமிழ்நாட்டில் குரல் நெறிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் குறைக்கப்பட்டால் அது நமக்கு அநீதி இழைக்கும் நடவடிக்கையாகும். உரிமை போராட்டத்தை தமிழ்நாடு நடத்தும்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஒன்றிய அரசை சாடிய விஜய்
"50 ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்து, மக்கள் தொகை வளர்ச்சியைத் திறம்படக் கட்டுப்படுத்தியுள்ள தமிழ்நாடு மற்றும் இதர தென் மாநிலங்களுக்கு, நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை, பெரும் தண்டனையே" -தவெக தலைவர் விஜய் அறிக்கை
மீண்டும் எகிறிய தங்கம் விலை
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பது பொதுமக்களிடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து 64 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை 45 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 65 ரூபாயாக உள்ளது.
தருமபுரம் ஆதீனத்திற்கு நிலம் தானம்:
தருமபுரம் ஆதீன மடத்தை தோற்றுவித்த குருஞான சம்பந்தர், 600 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த இடத்தை வாங்கி, ஆதீன மடத்திற்கு தானமாக வழங்கிய பக்தர் சீர்காழியைச் சேர்ந்த பொறியாளர் மார்கோனி, ₹2 கோடி மதிப்பிலான அந்த இடத்தை வாங்கி, அதற்கான ஆவணங்களை ஆதீனத்திடம் வழங்கினார். அந்த இடத்தில் கோயில் மற்றும் பள்ளிக்கூடம் தொடங்கப்படும் என ஆதீனம் பேட்டி
கும்பமேளா நீரை மாநிலம் முழுவதும் கொண்டு செல்லும் உ.பி. அரசு
பிரயாக்ராஜ் கும்பமேளாவில் நீராட முடியாத பக்தர்கள் வசதிக்காக, தீயணைப்பு வாகனங்கள் மூலமாக 31,000 லிட்டர் திரிவேணி சங்கம நீரை உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களுக்கும் கொண்டு செல்கிறது மாநில அரசு. முதற்கட்டமாக நொய்டாவுக்கு 10,000 லிட்டர் 'அமிர்த ஜலம்' கொண்டு வரப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய ட்ரம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்
மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியின் கிளீனர் கொலை
ஹரியானா: பல்வால் பகுதியில் மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியின் ஓட்டுநர், கிளீனரை தாக்கி கால்வாயில் தூக்கி வீசிய பசு பாதுகாப்பு கும்பல். கிளீனர் உயிரிழந்த நிலையில், 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஓட்டுநர் பால்கிஷான் லக்னோவை நோக்கிச் செல்கையில், வழிதவறிப்போய் பல்வால் பகுதியில் நிறுத்தியுள்ளார். அங்கு வந்த கும்பல், பால்கிஷான் மற்றும் கிளீனர் சந்தீப் இருவரையும் கடத்திச் சென்று தாக்கி கால்வாயில் வீசியுள்ளனர்
ட்ரம்ப் உரை -எதிர்க்கட்சி எம்.பி. வெளியேற்றம்
இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தில் ட்ரம்ப் முதல் உரை. எதிர்க்கருத்து தெரிவித்த ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் வெளியேற்றம். ட்ரம்ப் பேசும் போது, “உங்களுக்கு அதிகாரம் இல்லை" என உரத்த குரல் எழுப்பிய க்ரீனை, இருக்கையில் அமருமாறு சபாநாயகர் அறிவுறுத்தினார் எனினும், தொடர்ந்து க்ரீன் தனது கருத்தைக் கூறவே, உடனே பாதுகாப்பு அதிகாரிகளை அழைத்து அவரை வெளியே கூட்டிச் செல்ல உத்தரவு.
ஜப்பானை மிரட்டும் காட்டுத் தீ
ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் தொடங்கிய காட்டுத்தீ, அருகில் உள்ள நகரங்களுக்கும் பரவத் தொடங்கியதால், 100 வீடுகள் தீக்கிரையாகி உள்ளன. 5,000 ஏக்கர் வனப்பகுதி முற்றிலும் எரிந்து சேதமாகி உள்ளது. 1,200க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 2,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புது வரலாறு படைத்த கேப்டன் ரோகித்
ஐசிசி நடத்தும் போட்டிகளில் 4 விதமான போட்டிகளின் இறுதிப்போட்டிக்கு, தனது அணியை வழிநடத்திய முதல் கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். அதன்படி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி ஃபைனலுக்கு அவர் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார்.
இந்தியாவுடன் மோதப்போவது யார்?
ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப்போட்டியில் இந்தியா உடன் மோதப்போவது யார் என்பதை உறுதி செய்யும் இரண்டாவது அரையிறுதி இன்று நடைபெற உள்ளது. லாகூரில் நடைபெற உள்ள போட்டியில், நியூசிலாந்து மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.