த்ரீனா கைஃப் வீட்டை தொடர்ந்து நோட்டமிட்ட, அவரின் காரை பின் தொடர்ந்து சென்ற 28 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.


பிரபல பாலிவுட் தம்பதியும், முன்னணி நடிகர்களுமான கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கெளசலுக்கு சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் வாயிலாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மும்பை சாண்டகுரூஸ் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அடிப்படையில், சாண்டகுரூஸ் காவல்துறை அடையாளம் தெரியாத நபரின் மீது சட்டப்பிரிவு 506  ,  354 -D ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அத்துடன் தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழு வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். குறிப்பிட்ட இன்ஸ்டா பக்கத்தில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதால் சோஷியல் மீடியா கணக்குகளையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் காத்ரினா கைஃப் வீட்டை தொடர்ந்து நோட்டமிட்ட, அவரின் காரை பின் தொடர்ந்து சென்ற 28 வயது இளைஞரை போலீசார் கைது செய்தனர்.






மன்விந்தர் வின்வாசனி சிங் என்ற அந்த இளைஞர் தொடர்ந்து கத்ரீனா கைஃப்க்கு கொலை மிரட்டல் கொடுத்து வந்துள்ளார். @kingadityarajput என்ற இன்ஸ்டா பக்கத்தை நிர்வகித்து வரும் அந்த இளைஞர் கத்ரீனா தன்னுடைய காதலி, மனைவி எனக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தான் கத்ரீனாவுடன் இருப்பதுபோல பல மார்பிங் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ளார்.


இதுகுறித்து தெரிவித்துள்ள போலிசார், ''உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மருத்துவரின் மகனான மன்விந்தர் ஜூன் 13ம் தேதி கவுசலுக்கும், கத்ரீனாவுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த வருடம் முதலே இந்த ஜோடியை குறி வைத்து மிரட்டல் மெசேஜ்களை அந்த இளைஞர் அனுப்பி வந்துள்ளார்’’ என்றனர்.






தற்போது கைது செய்யப்பட்டுள்ள இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு நடிகர்கள் யாருக்கும் இப்படியான மிரட்டல்களை கொடுத்துள்ளாரா, கத்ரீனாவை தொடர்ந்து பாலோ செய்ய என்ன காரணம் என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.