ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டும் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இரண்டு படங்களாகும். சமீபத்தில் RRR படத்தின் விளம்பரங்களின் போது, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, 3-ம் பாகத்தின் சாத்தியக்கூறுகள் குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அண்மையில் பேசியுள்ள பாகுபலி தயாரிப்பாளர் பிரசாத் தேவினேனி ‘பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இதுகுறித்த அறிவிப்புகள் சரியான நேரத்தில் வந்தடையும்’ எனக் கூறினார்.
“இயக்குநர் ராஜமௌலி மேடையில் என்னவென்றால், பாகுபலி சீரிஸின் மற்றொரு கதையைச் சொல்ல அதிக வாய்ப்பு உள்ளது. பாகுபலி படத்தின் கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றும் லைஃப் சைஸ் கதாப்பாத்திரங்கள். இருந்தாலும் நாங்கள் உடனடியாகத் தொடங்க விரும்பவில்லை, காரணம் என்னவென்றால் அதற்கு முன்பு இயக்குநருக்கு இரண்டு முக்கியப் பொறுப்புகள் உள்ளன. அதனால் அறிவிப்பை அதன்பிறகு யோசிக்க உள்ளோம். எல்லாம் சரியாகத் திட்டமிட்டபடி நகர்ந்தால் நிச்சயம் நாம் அதற்கான வேலையைத் தொடங்கலாம். ஆனால் தற்போது எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை” என்கிறார் தேவினேனி.
பாகுபலி எழுத்தாளர் கே.வி.விஜயேந்திர பிரசாத்திடம் இதுகுறித்துக் கேட்டோம். பாகுபலி 3 பற்றிய ராஜமௌலியின் சமீபத்திய குறிப்பைப் பற்றியும், அது நடக்கிறதா என்றும் நாங்கள் அவரிடம் கேள்வி எழுப்பினோம், அதற்கு பதிலளித்த அவர், “அதற்கு வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு மகேஷ்பாபு உடனான ராஜமௌலியின் படம் ஒன்று கைவசம் இருக்கிறது. அது நடக்காமல் மற்ற எதுவும் நடக்க வாய்ப்பில்லை.” என்றார்.
இதற்கிடையில், ராஜமௌலி தற்போது ஜூனியர் என் டி ஆர் மற்றும் ராம் சரண் ஆகியோரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான அவரது வரலாற்று ஆக்ஷன் படமான RRRன் வெற்றிக் கொண்டாட்டத்தில் மும்முரமாக உள்ளார். இதில் அலியா பட் மற்றும் அஜய் தேவ்கனும் நடித்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் ஆலியா பட் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது காடுகளில் நடக்கும் ஆக்ஷன் கதையாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.